68
தமிழ் காத்த தலைவர்கள்
தமிழ்ச் சங்கத் தொடக்கம்
மீண்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழ்ச் சங்கத் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதுரைச் சேதுபதி கலாசாலை மண்டபத்தில் மாபெரும் கூட்டம் கூடியது. சேதுவேந்தராகிய பாஸ்கர சேதுபதி விழாத் தலைவராகவும் சங்கத்தலைவராகவும் வீற்றிருந்தார். அவ்விழாவில் 'நான்காம் தமிழ்ச் சங்கம்' அமைக்கப்பெற்றது. பாண்டித்துரைத் தேவர், மதுரை வடக்குவெளி வீதியில் இருந்த தமது மாளிகையினைத் தமிழ்ச் சங்கத்திற்குக் கொடையாக மனம் உவந்து கொடுத்தார். சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை, பாண்டியன் புத்தகசாலை, நூல் ஆராய்ச்சிச்சாலை, சங்கப் பதிப்பகம் முதலியன அமைக்கப்பட்டன.
நான்காம் தமிழ்ச் சங்கம்
நாராயண ஐயங்கார் என்னும் நற்றமிழ்ப் புலவர், கலாசாலைத் தலைமைப் புலவராகப் பணியேற்றார். சங்கத்திலிருந்து செந்தமிழ்' என்னும் திங்கள் இதழ் தொடங்கப்பெற்றது. அதற்கு ரா. இராகவையங்கார் ஆசிரியராய் அமர்ந்தார். அதற்குத் துணை ஆசிரியராக மு. இராகவையங்கார் அமைந்தார். சங்கக் கலாசாலையில் தமிழ் வகுப்புக்கள் நடத்தப் பெற்றன. பண்டிதப் பட்டம் பெறுவதற்கு