70
தமிழ் காத்த தலைவர்கள்
'உகர முதற்றே உலகு'
என்று அவர் திருத்தியிருந்தார். இவ்வாறே அத் துரைமகனார் எதுகை மோனைகள் அமையாத குறட்பாடல்களைத் தமது விருப்பம் போல் மாற்றி அமைத்திருந்தார். அத்திருத்தங்கள் தேவருடைய சினத்தைப் பெருக்கின. அவர் அதனை அடக்கிக்கொண்டார்.
திருக்குறள் தீக்கிரை
தேவர், அத்துரைமகனாரை நோக்கித், "தாங்கள் இம்முறையில் எத்தனே படிகள் அச்சிட்டீர்கள்?" என்று கேட்டார். 'ஐந்நூறு படிகள் அச்சிட்டேன்' என்றார் அவர். 'இப்போது தங்கள் கையில் எஞ்சியுள்ள படிகள் எத்தனை? என்று கேட்டார் தேவர். இருநூறு படிகள் செலவாகிவிட்டதாயும் முந்நூறு படிகளே எஞ்சியுள்ளன என்றும் அவர் கூறினார். படியொன்றின் விலை ஒரு ரூபாய் என்று குறித்திருந்தார். தேவர் அத்துரைமகனாரிடம் முந்நூறு ரூபாய்களைக் கொடுத்தார்; 'தங்களிடம் உள்ள முந்நூறு படிகளையும் எனக்கே அனுப்பிவிடுங்கள்' என்று கூறி அவரை வழியனுப்பினார். அவர் தாம் பதிப்பித்த நூலின்மேல் தேவர் மிகுந்த விருப்பம் கொண்டுவிட்டார் என்று எண்ணிச் சென்றார். மறுநாளே மதுரையிலிருந்து அந்