பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வசன நடை கைவந்த வல்லார்

73


யார்க்கு நல்லார் என்னும் ஆசிரியர் உரை எழுதியுள்ளார். இவ்வுரைப்பகுதிகள் எல்லாம் உரைநடையால் அமைந்தவை; பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னமையே தோன்றியவை. எனினும் அவற்றை முழுதும் உரைநடையால் ஆகிய நூல்கள் என்று சொல்லமுடியாது.

தமிழ் பரவுதற்குத் தடை

பிற்காலத்தில் செய்யுள் நூல்களைக் கற்பவர் மிகவும் குறைந்தனர். புலவர்களே அவற்றைப் போற்றிக் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் தமிழரிடையே சிறந்த கருத்துக்கள் பரவுதற்குத் தடையாயிற்று. இந் நிலையைக் கண்ட தமிழறிஞர் பலர், காலத்திற்கு ஏற்ற உரைநடை நூல்களே ஆக்கத் தொடங்கினர். உரைநடையை வசனம் என்றும் வழங்குவது உண்டு.

வசன நடை கைவந்த வல்லார்

சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிறந்த வசன நூல்களை வரைந்து பரப்பியவர் ஆறுமுக நாவலர் என்னும் அறிஞர் ஆவார். அவரது வசன நடை சிறுவர்களும் விரும்பிக் கற்கும் சுவை உடையதாக அமைந்தது. ஆதலின் அறிஞர்கள் அவரை 'வசன நடை கைவந்த வல்லார்' என்று பாராட்டுவர். அவர்