தமிழும் தலைவரும்
3
டினர். அவர்கள் தங்கள் தலைநகரங்களில் தமிழ்ச் சங்கங்களை அமைத்தனர். அச்சங்கங்களில் நாட்டிலுள்ள தமிழ்ப் புலவர்களையெல்லாம் ஒன்று கூட்டினர். அவர்கள் வாழ்க்கைக்கு வேண்டுவனவற்றையெல்லாம் கொடுத்துப் பேணினர். அதனால் புலவர்கள் எந்தக் கவலையுமின்றி இன்பமாக வாழ்ந்தனர். தம்முடைய நேரத்தையெல்லாம் தமிழை ஆராய்வதிலேயே கழித்தனர். புதிய தமிழ்ப் பாடல்களை இயற்றினர். அரிய தமிழ் நூல்களை ஆக்கினர். சிறந்த பாடல்களும் உயர்ந்த நூல்களும் தோன்றத் தோன்றத் தமிழ் வளமுடன் வளர்ந்துகொண்டே வந்தது.
புலவர்கள் வளர்த்த தமிழ்
பாண்டியரைப் போன்ற பேரரசர்களும், பாரி வள்ளலைப் போன்ற சிற்றரசர்களும் தமிழைக் காத்து வளர்த்து வங்தனர். அவர்கள் ஆதரவைப் பெற்ற தமிழ்ப் புலவர்களும் தமிழை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். தமிழுக்கு உயர்வைத் தரும் நூல்களை இயற்றுவதிலேயே தம் கருத்தைச் செலுத்தினர். தமிழர்க்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமையைத் தரும் நூல்களையே இயற்றினர். இதனேயே அவர்கள் தம் வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு உழைத்து