76
தமிழ் காத்த தலைவர்கள்
யல் அறிவு என்பவற்றில் சிறந்து விளங்கினர்.
இளமைக் கல்வி
ஆறுமுக நாவலர் 1822ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் இளமையிலேயே கல்வியில் ஆர்வம் உடையவராய் இருந்தார். நல்லூரில் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தி வந்த சுப்பிரமணிய பிள்ளையிடம் அவர் தொடக்கக் கல்வி பயின்றார். அவரிடமே நீதி நூல்களையும் நிகண்டு முதலான கருவி நூல்களையும் கற்றார். அவர் ஒன்பதாம் வயதுவரை சாதாரணமாகக் கற்கும் மாணவரைப் போலவே காணப்பட்டார். அவரது தலை மிகப் பெரியது; பிற உறுப்புக்கள் சூம்பி இருந்தன. அதனால் அவரைப் ' பாணைத்தலையர்' என்று பலரும் அழைப்பர்.
புலவர்களிடம் தமிழ்க் கல்வி
நாவலருக்கு ஒன்பது வயது நடந்து கொண்டிருக்கும்பொழுது அவர் தங்தையார் இறந்தார். அவர் தாம் இறப்பதற்கு முன் நாடக நூல் ஒன்றை எழுதத் தொடங்கினார். அதனை முடிப்பதற்குள் இறந்துவிட்டார். அப்பொழுது தங்தையார் குறையாக வைத்துச் சென்ற அஙந் நாடகத்தை நாவலர் பாடி முடித்-