80
தமிழ் காத்த தலைவர்கள்
காலையிலும் இரவிலும் மாணவர் பலருக்குத் தமிழ் நூல்களையும் சமய நூல்களையும் கற்பித்தார். பல ஊர்களுக்கும் சென்று அரிய சொற்பொழிவுகள் ஆற்றினர்.
சைவப் பிரகாச வித்தியாசாலை
அவர் தமது இருபத்தாறாம் வயதில் ஆசிரியப் பணியிலிருந்து விலகினார். யாழ்ப் பாணத்தில் உள்ள வண்ணார்ரபண்ணை என்னும் ஊரில் 'சைவப் பிரகாச வித்தியாசாலை' என்னும் பள்ளியை அமைத்தார். அப்பள்ளியில் தம் மாணவர்கள் பலரை ஆசிரியர்களாக நியமித்தார். அதன் வாயிலாகச், சமயத்தையும் தமிழையும் பரப்பினார். அப்பள்ளியில் கற்பிப்பதற்காகப் பால பாடங்களையும் சைவ சமய நூல்களையும் எளிய உரை நடையில் எழுதி அச்சிட்டார். சிதம்பரத்திலும் அதைப் போன்று ஒரு பள்ளிக்கூடத்தை ஏற்படுத்தினார். யாழ்ப்பாணத்தில் உள்ள பல ஊர்களில் அத்தகைய பள்ளிகளை நிறுவுவதற்குத் தூண்டினார். இங்ஙனம் அவர் இடைவிடாமல் தமிழ்த் தொண்டும் சமயத்தொண்டும் ஆற்றி வந்தார்.
ஆதீனத்தில் 'நாவலர்' பட்டம்
நாவலர் சமயச் சொற்பொழிவு செய்வதில் வல்லவர். தமிழ் இலக்கியங்களைப்