பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வசனகடை கைவந்த வல்லார்

81

பற்றிப் பேசுவதில் பெருந்திறமை படைத்தவர். அவருடைய சொல்வன்மையைப் பலரும் பாராட்டிப் பேசினர்.திருவாவடுதுறை ஆதீனத் தலைவராக இருந்த மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் அவரைப் பற்றிக் கேள்வியுற்றார், அவரைத் தமது திருமடத்திற்கு வருமாறு அன்புடன் அழைப்பு அனுப்பினார். அதனை ஏற்ற ஆறுமுக காவலர் ஆதீனத் தலைவரைக் காண்பதற்கு வந்தார். அப்பொழுது மகாவித்துவான் மீனாட்சிசசுந்தரம் பிள்ளை ஆதீனப் புலவராக அங்கு அமர்ந்திருந்தார். அவ்விடத்தில் நாவலரைச் சமயச் சொற்பொழிவு ஆற்றுமாறு அனைவரும் வேண்டினர். அவருடைய நாவன்மையைக் கண்டு வியந்த ஆதீனத் தலைவர், அவருக்கு 'நாவலர்' என்ற நற்பட்டத்தைச் சூட்டிப் பாராட்டினார். அவருக்குப் பொன்னடையும் பொற்கிழியும் வழங்கிப் போற்றினர், அவர் தமது இருபத்தேழாம் வயதில் இத்தகைய சிறப்பைப் பெற்றார்.

வசன நூல்களும் பதிப்புக்களும்

நாவலருக்குச் செய்யுள் இயற்றும் திறமைசிறு பருவத்திலேயே நன்றாக அமைந்திருந்தது. எனினும் அவர் காலத்திற்கு ஏற்றவாறு தமிழ்த்தொண்டு செய்ய விரும்பினார்.மக்-