82
தமிழ் காத்த தலைவர்கள்
ளிடையே தமிழ் ஆர்வத்தைப் பெருக்குவதற்கு வசன நூல்களே தேவை என்று தெரிந்தார். பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் போன்ற வசன நூல்களை எழுதினார். ஆங்கிலத்தில் உள்ள நிறுத்தற் குறிகளைத் தம் நூல்களில் கையாண்டார். இவ்வகையில் அவர் தமிழுக்கு முதல் வழி காட்டியாய் விளங்கினர். அவர் தம் நூல்களைப் பிழையில்லாமல் அச்சிடுவதற்குச் சொந்தமான அச்சகம் ஒன்றை அமைத்தார். அதன் வாயிலாகப் பல தமிழ் நூல்களே ஒரு பிழையும் இல்லாமல் அச்சிட்டு உதவினர். 'நாவலர் பதிப்பில் எந்தப் பிழையும் இராது' என்ற உறுதியான நம்பிக்கையை நாட்டில் உண்டு பண்ணினார்.
பதிப்பின் சிறப்பு
ஆறுமுக நாவலர் சென்னையில் 'வித்தி யாநுபாலன இயங்திரசாலை' என்னும் பெயரால் அச்சகம் ஒன்றை அமைத்தார். அதன் வாயிலாகவும் பல தமிழ் நூல்களைப் பிழையின்றிப் பதிப்பித்தார். இவருடைய பதிப்பின் சிறப்பை இராமநாதபுரம் பொன்னுசாமித் தேவர், திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் முதலானேர் பார்த்து வியந்தனர். தேவர் பல தமிழ்நூல்களை நாவலரைக் கொண்டு