பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராம வீரப்பன்

7. இராமசாமி தெரு, கோபாலபுரம், சென்னை - 600 086. தொலைப்பேசி: 28/17/66

நாள் : 21.04.06

வாழ்த்துரை:

'தமிழ்நாடகத் தலைமை ஆசிரியர்' என்கிற தலைப்பில் தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை, சிறிய அளவில் என்னுடைய நாடக ஆசிரியரும், எனக்கு 14 வயது ஆனபோது என்னுடைய எதிர்கால வாழ்க்கைப் பாதையை வழிகாட்டி அமைத்துத் தந்தவரும் தமிழ் நாடக உலகில் ஒப்புயர்வு இல்லாத தனி இடத்தைப் பெற்றவருமான முத்தமிழ் கலா வித்வரத்தினம் அவ்வை டி. கே. சண்முக அண்ணாச்சி அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னாலே எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய அருமைப் புதல்வர் தம்பி டி.கே.எஸ்.கலைவாணன் அவர்கள் இதனை மறுப்பதிப்பாக கொண்டு வருகிறார்கள்.

தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரை கடந்த நூற்றாண்டில் மறைந்த கலைஞர்கள் பலருடைய பெயர் தெரியும், அதைப் போன்றே நாடக ஆசிரியர்கள் சிலருடைய பெயரும் தெரியும் ஆனால், அவர்களைப் பற்றிய வரலாறுகள் தெளிவாக, விரிவாக எழுதப்படவில்லை பொதுவாகவே தமிழகத்தில் கடந்த

நூற்றாண்டில் சமுதாய சீர்திருத்த இயக்கம் தோன்றிய ஒரு சூழலில் பழைய கருத்துக்களை, மூடக் கருத்துக்களை எதிர்க்க