பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26哆 தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

புலவர்களால் மிகக் கடினம் என்று கருதப்பட்ட வண்ணம், சந்தம், இவற்றைப்பாடுவதில் சுவாமிகள் மிகவும் வல்லவராயிருந்தார். அவரது 'சந்தக் குழிப்புக்களிலே காணப்படும் தாள விந்நியாசங் களையும், சொற்சிலம்பங்களையும் பார்த்துப் பரவசமடைந்த மகா வித்துவான் மான் பூண்டியா பிள்ளை அவர்கள்தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைத் தமது 'தத்து புத்திரராக' ஏற்றுக்கொண்டார்.

சக மாணவர்கள்

சுவாமிகளைச்சந்தங்கள் பாடச்சொல்லிவிட்டுப் பிள்ளையவர்கள் 'கஞ்சிரா' வாசித்துத் தானே களிப் படைவாராம். இந்தச்சமயத்திலேதான்தமிழகத்தின் தலைசிறந்த மிருதங்க வித்வான்களான திருவாளர்கள் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை, பழனி முத்தையா பிள்ளை இருவரும் மகா வித்துவான் மான்பூண்டியா பிள்ளை அவர்களிடம் மாணவர் களாக இருந்து வந்தனர்.

மீண்டும் நாடகாசிரியர்

தமிழ்நாடு செய்த தவத்தின் பயனாக மகா வித்துவான் மான்பூண்டியா பிள்ளை அவர்கள் வேண்டுகோளின்படி சில ஆண்டுகளுக்குப் பின் சுவாமிகள் மீண்டும் நாடக ஆசிரியப் பொறுப்பை மேற்கொண்டார். பிள்ளை அவர்களையும் அடிக்கடி சென்று பார்த்து வருவதுண்டு. வள்ளி வைத்திய