பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54哆 தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

கூட இன்று நமக்குக் கிடைக்கவில்லை. கவிராயர் அவர்கள் பாடியவற்றில் இரண்டு வரிகள் மட்டும் எங்களுக்கு நினைவிலிருக்கின்றன.

'நான்சாக நீகாண வேண்டுமென

நினைத்திருந்தேன் தான்சாக மருந்துண்ட

சங்கரதாஸ்ஐயனே' என்ற அந்த இரண்டு வரிகளிலேயே கவிராயர் அவர் களுக்கும் சுவாமிகளுக்கும் இருந்த உள்ளத் தொடர்பு வெளிப்படுகிறதல்லவா?........ புலவனைப் போற்றிய புலவர்

சுவாமிகள் மிகுந்த உதார குணமுடையவர். எளியோர்க்கிரங்கும் உள்ளம் படைத்தவர். பொருள் திரட்டும் போக்கு அவரிடம் இறுதிவரை இருந்ததே யில்லை. தன்னிடம் இருப்பதை எல்லோருக்கும் கொடுத்து இன்புறும் பண்பு சுவாமிகளிடம் நிறைந்திருந்தது.

அந்தக் காலத்தில் தமிழகத்தின் வட பகுதியிலே நாடகாசிரியராகத் திகழ்ந்தவர் திருவாளர் ஏகைசிவசண்முகம்பிள்ளை அவர்கள். இராமாயணம், கண்டி ராஜா, ஹரிச்சந்திரன் முதலிய நாடகங்கள் இப்பெரியாரால் இயற்றப்பெற்றவை. வேலூர் தி. நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் கம்பெனி முதல் இன்றுவரை சம்பூர்ண இராமாயணத்தை