பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்

63



இருவரிடையே சண்டை மூள்கிறது. வல்லரக்கன் கூற்றாக இதோ ஒரு பாடல்:-

காய் பசிக்கனல் மூளலுற்றது
கான கத்தினில் வாழ்ந்திடும்
பாய் தொழிற்புலி சிங்கம் யானைகள்
பன்றி மான் முயல் காண்கிலேன்
தாய் தகப்பனை நீங்கியிங்குத்
தனித்து நித்திரை செய்ததேன்
வாய் துடிக்குது தின்பதற்குனை
வாவெனக் குணவாகவே!

வல்லரக்கனின் இந்தக் கொடிய அழைப்பைக் கேட்ட அபிமன்யு அதற்கு விடையாக இதோ ஒரு பாடலைப் பாடுகிறான்:-

தீமையதைப்புரி ராவணனைச் சில
தேடி எடுத்தொரு வாளியினால்
ராமனெதிர்த்துயிர் போக வதைத்தது
நாடறியக்கதை யானதடா
நீமதமுற்றெனதோடு மெதிர்த்தனை
நீடுநிலத்தினிலே விழவே
தாமதமற்பமிலாதுனை யித்ததி
சாடியகற்றுவன் மாறிலையே

இராமன் வரலாற்றை உதாரணமாகக் கொண்டு விளங்கும் இந்தப் பாடலுக்குரிய சந்தத்தையும் சுவாமிகள் இராமாயணத்திலிருந்தே எடுத்துள்ளார் என்று அறிகிறோம். இப்பாடல் கம்பநாடனுடைய சந்தப்பாடலின் ஓசையைப் பெற்றுள்ளது. கங்கையின் எதிர்க்கரையில் பரதனும் அவனுடைய சேனையும்