பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்

71



சுடு சரத்தின் அடிபொறுக்காமல் நீ
தொடை நடுக்கம் எடுத்துயிர் வாழவே
படுகளத்தில் ஒப்பாரி பகருதல்
பலர்நகைக்க வசைதருமல்லவோ
விடுசமர்த்தொடு சண்டைசெய் உன்தலை
விதியிழுத்துவந் தென்னிடம் விட்டது
கடுகடுத்த முகவல் லரக்கனே
கதை எடுத்தமர் செய்யிது வேளையே

இத்துணைப் பொருட் சிறப்பும் ஓசைச் சிறப்பும் பொருந்தப் பாடும் சுவாமிகள், அந்நாளைய ரசிகர்கட்கேற்ற வகையில் நகைச்சுவை பொருந்த எளிய சொற்களால் பாடவும் வல்லவர் என்பதனைப் பின்வரும் பாடல் அறிவிக்கும்:-

வண்ணான் சாலைப்போலத் தோணுது உன் தொந்தி
வாய்த்த முகத்தழகால் நீ ஒரு மந்தி
எண்ணாமல் ஏதேதோ சொன்னாய் மொழிசிந்தி
எமனூர் போயுன் இனத்தார்களைச் சந்தி

மடையன், குரங்கு என்பன போன்ற சொற்கள் அந்நாளைய நாடக மேடைகளில் பேசப் பெறுவது மிகச் சாதாரணம் என்பதை அறிந்து விட்டால், இந்த உரையாடல் பாடல்கள் என்பவை புதுமையை விளைவிக்கா. மூன்றாவது அடியில் உள்ள ஏதேதோ சொன்னாய் மொழி சிந்தி என்ற சொற்றொடரைக் கவனித்தல் வேண்டும். சிந்திப் போதல் என்ற சொல்லை நாம் அறிவோம். பால் சிந்திப் போயிற்று என்றால் நாம் ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டிய ஒன்று, நம்மையும் மீறிச் சிந்திப் போய் விட்டது என்பதுதானே பொருள். அதே போல மொழி