பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

அ.ச. ஞானசம்பந்தன்



வசனம் என்றும் கூறினார் என்பதே பாராட்டுக்குரியதாகும். அந்நாளைய சமுதாயம் இதற்காக அவரை வெறுத்து ஒதுக்காமல் விட்டது என்றால், அவருடைய நெஞ்சு உரமே அதற்குக் காரணமாகும்.

நாடகங்களில் மட்டுமல்லாமல் தனிப்பாடல்களிலும் குறளை அப்படியே வாரி வழங்கியுள்ளார். ‘இன்கவித் திரட்டு' என்ற பாடல் தொகுப்பில் பல குறள்கள் தாண்டவமாடுகின்றன. 'துவாத சாந்தப் பெருமான்' என்ற பாடலில்

அவாவே பிறப்பினும் வித்தென்று வள்ளுவர்
ஆராய்ந்து சொல்லினர் அன்றோ
அந்த ஞான போதம் சிந்தை செய்யாமல்
அகற்றி விடுதலும் நன்றோ
பற்றற்றான் பற்றினைப் பற்றென்று சொன்னதும்
பாவனை உண்மையின் மார்க்கம்
பலிக்கும் வழியை விளக்கியதன்றோ
பகர்ந்த தெல்லாமவர் தீர்க்கம்
சற்றுஞ் சந்தேகமில்லை குறளாகிய
சாத்திரம் ஒன்றுமேபோதும்
சர்வகலாசார ஞானந்தருமது
தன்னைப் படிப்பாய் எப்போதும்

இப்பாடலின் முதலிரண்டு கண்ணிகளில்

அவா என்ப எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பினும் வித்து  (361)

என்ற குறளும், -

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு(350)