பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கவிஞர் கு. சா. கி.

புகழ்க்கூத்து, வெற்றிக்கூத்து, வசைக்கூத்து, சாந்திக் கூத்து என்ற கூத்துவகைப் பெயர்களே இதற்குச் சான்றாக விருப்பதைக் காணலாம்.

நாடக நடனக் கூத்துக் கலையின் மாற்றங்கள்

நான் முன்னே சுட்டிக் காட்டியபடி, தமிழகத்தில் களப்பிரர், பல்லவர், சாளுக்கியர் போன்ற வேற்றரசர் களின் ஆட்சியும், சமணம், பெளத்தம் போன்ற புறச்சமயத் தாக்குதல்களும், பாலிமொழி, வடமொழி, தெலுங்கு போன்ற வேற்று மொழி கலைக் கலாச்சாரங்களும் பெருகப் பெருக, தமிழர்களின் மரபு வழிப்பட்ட நடனநாடகக் கலைகளிலும், புறச்சமய மொழி வழிப்பட்ட மாற்றங்கள் ஏற்படவேண்டிய நிலைகள் தோன்றின.

இதிலிருந்து, தற்காப்புக்காக, நடன நாடகக் கலைகள் கோயில்களில் அடைக்கலம் புகவே, ஆங்கு தேசீயம் தெய் வீகமாகிப், பின் தெய்வீகம் சிங்கார ரசத்தில் இறங்கி, நாளடைவில் சிற்றின்பச் சேற்றில் சிக்கித் தவிக்கும் இரங்கத்தக்க நிலை நாட்டியக் கலைக்கும் நேர்ந்தது.

இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், போன்ற புராண இதிகாச கதைகளும், மற்றும் அப்புராணங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிளைக் கதைகளும் நாடகமேடை களை ஆக்ரமித்துக்கொள்ளும் கட்டாய சூழ்நிலைகள் நாடகக் கலைக்கும் நேர்ந்தது.

இந்நிலையில் பண்டைய தமிழர்களின் மரபு வழிப்பட்ட நாடக, நடன, இசையிலக்கண நூல்களும், இலக்கிய நூல் களும், சீந்துவாரற்றுச் சிதைந்து மறைந்து போவதென்பது இயற்கைதானே.

நான் மேலே கூறிய நிலைமைகள் கூட கி. பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சிறுகச் சிறுகத் தோன்றியது.