பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 99

அதற்குமுன் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி ஆறாம் நூற்றாண்டு முடியும்வரை தமிழகத்தின் இருண்ட காலமாக வரலாற்று அறிஞர்களால்குறிக்கப்பெறும் களப்பிரர் களின் கொடுங்கோன்மை நடந்தகாலங்களில், தமிழர்களின் கலை, கலாச்சாரங்கள் அனைத்துமே சிதைந்து சீரழிந்து போயின.

சமணச் சார்பற்ற இலக்கியங்களோ கவின்கலைகளோ எங்கும் தலைகாட்ட முடியாத அவலநிலை தலையெடுத்தது. அடக்குமுறைக்கு ஆட்பட்ட மக்களேயன்றி, அக்காலத் தில் பாண்டிய நாட்டின் மன்னனாகிய கூன்.பாண்டியனே, அந்த வறட்டு மதத்தின் குருட்டுப் போக்கில் மயங்கிக் சமணத்தைத் தழுவினான்.

இந்தப் பேராபத்திலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றத் தோன்றிய விடி வெள்ளிகள்தாம் மணிவாசகர், அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகிய அருளாளர்கள். பெளத்த சமணத்தை வீழ்த்தவும், சைவத்தைக் காக்கவும், தங்கள் உயிரையும் திரணமாக மதித்துக் களம்புகுந்த அம்மாவீரர் களின் தொண்டு, சைவ சமயமும் தமிழ்க் கவின்கலைகளும் உள்ளவரைப் போற்றுதற்குரியதாகும்.

இச்சமயப் போருக்கு அந்த அருளாளர்கள் பயன் படுத்திய ஆயுதம் தமிழிசைப் பண்களே யாகும்.

அத்தகைய பக்திப் பண்களைப் பாடிப்பாடியே, தமிழர் களின் உள்ளங்களிலெல்லாம் புரட்சிக் கனலை மூட்டினார்கள். சமணர்களின் சதித்திட்டங்களையெல்லாம் தகர்த்தெறிந் தார்கள். அவர்களின் சாம்ராஜ்ய ஆதிக்கத்தையே அழித் தார்கள். மீண்டும் சைவ சமயம் தழைத்தது. தமிழ்ச் சமுதாயம் தலைதூக்கியது. தமிழர்களின் கவின் கலைகள் காப்பாற்றப்பட்டன. நலிந்து போன சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சிகள் மீண்டும் புத்துயிர் பெற்றன.

இத்தகைய மகத்தான சக்தியை அளித்த மூவர் தேவாரங்களும், மணிவாசகப் பெருமானின் திருவாசகமும்