பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கவிஞர் கு. சா. கி.

சிலப்பதிகாரக் காலத்திற்குமுன், தமிழ் நாடகக் கலை பெற்றிருந்த உன்னத நிலைகுறித்து, அரங்கேற்றுக்காதையில் இளங்கோவடிகள் தரும் தகவல்களும், உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் வழங்கும் குறிப்புகளும், நாம் வியப்பும் பெருமிதமும் கொள்ளத் தக்கதாகும்.

மாதவியின் நட்ன் அரங்கேற்றத்தைச் சொல்ல வந்த அடிகளார். அவள் ஐந்தாவது அகவை தொடங்கி ஏழாண்டுகள் பயிற்சியில் தேர்ந்ததும், ஆடற்கலை ஆசான் திறமும்,இசைஆசிரியனின்சிறப்பும், யாழ்,குழல்,தண்ணுமை , முழவுக்கலை வல்லார்களின் பெருமையும், இவற்றிற்கெல் லாம் சிகரமாக ஆடற்கலைக்குப் பாடல் புனையும் நன்னூற் புலவன் என்பவன்,

இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ் முழுதும் அறிந்த தன்மையன், ஆகி வேத்தியல் பொதுவியல், என்று இரு திறத்தின் நாட்டிய நன்னூல் நன்கு கடைப் பிடித்து...

உலகியல் அனைத்தும் உணர்ந்தவனாகவும். தமிழ் முழுதும்அறிந்த தன்மையனாகவும், இசைக்கலையில் தேர்ந்த ஞானமுள்ளவனாகவும், வேத்தியல் பொதுவியல் என்ற இரு வகைக் கூத்தின் இலக்கணம் தெரிந்தவனாகவும் இருந்தான் எனவும் கூறுகின்றார்.

ஆடற்கலைக்குத் தாளமாகத் தட்டப்பெறும் தலைக் கோல் என்னும் கருவிக்கு எத்தகைய தெய்வீகச் சிறப்பும் பெருமையும் இருந்ததாகச் சொல்லுகிறார் பாருங்கள்:

'வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்

புண்ணிய நன்னீர்ப் பொற்குடத்து ஏந்தி மண்ணிய பின்னர், மாலை அணிந்து, கலந்தரு நாளால் பொல்பூண் ஓடை அரசு உவாத் தடக்கையில் பரசினர் கொண்டு.