பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்துரை

கப்பலோட்டிய தமிழர் தேசபக்தர் வ. உ. சிதம்பரனார் அவர்களின் புதல்வர்

வ. உ. சி. சுப்பிரமணியம்

கலைமாமணி கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் படைத்துள்ள கருவூலம், 'தமிழ்நாடக வரலாறு. சிலம்புச் செல்வர் டாக்டர் ம. பொ, சிவஞானம் அவர்கள் இவ்வரிய நூலினை தமக்கேயுரிய தமிழ் உரை கல்லில் உரைத்துப் பார்த்து, மாற்றுக் குறையாத தங்கம் என்று சான்றளித்துள் ளார். நீதியரசர் இலக்கிய ரசிகமேதை அமரர் எஸ். மகராஜன் வழங்கியுள்ள நீண்ட சிறப்புரையில் நூலாசிரியரின் நாடகப் புலமை ஈடு இணையில்லாததென தீர்ப்பு வழங்கி விட்டார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நெறியாளர் சிலம்பொலி செல்லப்பன் தமது ஆய்வுரையில், இந்நூல் நாடகக் கலைக் களஞ்சியம், என்று நிலை நிறுத்தி உள்ளார். ஆசிரியர் கு.சா.கி. தம் பணிவுரையில் சுட்டிக்காட்டுவதுபோல், நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் நினைவு அறக் கட்டளைச் சொற்பொழிவுகள் அடிப்படையில் இந்நூல் பிறக்க வித்திட்ட தமிழறிஞர் அமரர் டாக்டர் ந. சஞ்சீவி அவர்கட்குத் தமிழ் உலகம்-குறிப்பாகக் கலையுலகம்-சிறப்பாக நாடகத் துறை நன்றிக் கடன் பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.

அறிவுச் சான்றோர் உலகமே நூலின் தனிப் பெரும் சிறப்புக்களைத் தெற்றெனச் சுட்டிக் காட்டிவிட்ட பின்பு,