பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 கவிஞர் கு. சா. கி.

காந்தியடிகளின் உப்புச் சத்யாக்ரக இயக்கம் பற்றிய ஒரு பாடல்:

உப்புவரிச் சட்டமது ஒழியவன்றோ காந்தி மகான் இப்பொழுது தொண்டர் படையுடனெழுந்து சென்றனர் தப்பிலாச் சாத்வீகப் போர் நடத்த: (காண்) ஒப்பினார் உலகம் வியப்பாய் வழுத்த காற்று மழை வெயில் கடலும் காசினிக்குப் பொது

வெனவே கண்டு கடல் நீர்க்குவரி தண்டுவதை நிறுத்திடவே காந்திமகான் வரி மறுப்புக் காரியமாய் ஆய்ந்து சென்றார் அணிவகுத்து வீரியமாய் கெய்ரோ ஜில்லாவில் கடல்கிட்டுத் தண்டிக் கிராமத்தில் அயராமல் உப்பு விளைவாக்கிடச் சென்றார் விரைவில் ஜெயமாக வேண்டும் அவர் செய் முயற்சி தேசமெங்கும் தினமடைய மனமகிழ்ச்சி

உப்புச் சத்யாக்கிர இயக்கம் பற்றிய மற்றொரு பாடல் :

விரிகடல் நீருக்கும் வரிகொடுத்தால்-காளை வெயில் மழை காற்றுக்கும் வரி விதிப்பார்! ஆதலால் உப்பு வரி மறுப்போம்-காந்தி அகிம்சா தருமத்தை ஆதரிப்போம்.

ஒரடி முத்துவேல் பிள்ளை

அவர்கள் பாடியது :

இத்தனை காலமாய்க் குட்டிக் குட்டித்தலை

மொட்டையடித்து விட்டார்

த்தனை குட்டையும் பட்டுப்பட்டு மிக <°纽活 @ 때 மெத்தனமாகி விட்டோம் (இ)