பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 - கவிஞர் கு.சா. கி.

பஞ்சத்தைப் பஞ்சால் வெல்லுவோம்படையை கதர் உடையால் வெல்லுவோம்-அங்கிய படையை கதர் உடையால் வெல்லுவோம். வஞ்சத்தை விட்டு அகல்வோம்-தேசீய மார்க்கத்திலே மனம்ம கிழ்வோம் (கதர்)

விஸ்வநாததாஸ் சவரத்தொழிலாளர் வகுப்பைச் சேர்ந் தவர் என்ற பாவத்துக்காக, பல நடிகையர் அவருடன் இணைந்து நடிக்க மறுத்த காலமும் ஒன்று உண்டு, சுப்ரமணியர் வேடத்தோடு மயில்வாகனத்தில் அமரக் கூடாது என்றுகூடச் சில ஊர்களில் உயர்ஜாதி வெறியர்கள் கலவரம் செய்தனர். ஆனால் இத்தடைகளையெல்லாம் உணர்ச்சிமிக்க தேசீயத்தொண்டர்கள் தகர்த்தெறிந்தனர். அடுத்துவரும் பாடலும் அவர் அடிக்கடி மேடையில் பாடியது தான.

செஞ்சுருட்டி-ஆதி

கொக்குப் பறக்குதடி பாப்பா-அதன் குறிப்பை உணர்ந்து கொள்வாய் பாப்பா- வெள்ளை

(கொக்கு) கொக்கென்றால் கொக்கு-நம்மைக் கொல்ல வந்த கொக்கு-இங்கே எக்காளம் போட்டு நாளும்-நம்மை ஏய்த்துப் பிழைத்து வாழும் (கொக்கு)

அக்கரைச் சீமை விட்டு வந்து -கொள்ளை அடித்துக் கொழுக்கும் வெள்ளைக் கொக்கு (கொக்கு)

கொந்தள மூக்குடைய கொக்கு-அது குளிர்பணிக் கடல் வாசக் கொக்கு அந்தோ பழிகாரக் கொக்கு-நம்மை அடக்கி ஆளுதடி பாப்பா (கொக்கு)