பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 187

வேணி ஆகியோர் அனைவரும் நாடகத்திலிருந்து திரைப்பட உலகினுக்கு வந்து வெற்றி பெற்றவர்களே ஆகும்.

கேரளத்தில் நாடகம்

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், எஸ். ஆர். ஜானகி அம்மாள் கம்பெனியில் நானும் ஒரு நடிகனாக இருந்தேன். அந்நாடகக் குழு கேரளாவில் நாடகம் நடத்தியபோது கண்ணனூர் என்ற ஊரில் முற்றிலும் மலையாளிகளே நடித்த கோவலன் நாடகம் ஒன்றைக் கண்டேன். அந்த நாடகத்தில் நடிகர்கள் பாடிய பாடல்கள் முழுவதும் சுவாமிகளின் பாடல் களாகவே இருந்தன. ஆனால் தமிழ்ப்பதங்களின் இடையே சில மலையாளச் சாற்களும் விரவியிருந்தன. உதாரணத் திற்கு என் நினைவில் உள்ள ஒரு பாடலின் சில வரிகளைச் சொல்லுகிறேன்.

மலையாளக் கோவலன் பாடல்

கழுத்தில் விழுந்த ஆரங் கழட்டானும் பாடில்லா காரண மெந்தோ ஞான் அறிஞ்யுது. டா கத்திப் பிச்சாட்யிம் வாளும் பெட்டிச்சிப் போயி காரணமெந்தோ ஞான் அறிஞ்யுது. டா கைலாச வாசா கருணச் செய்யனே-இதைக் கத்தறிக்கு தெங்ங்னே ஈ சமயத்தில் (கழுத்தில்)

இந்நாடகத்தைக் கண்ட தமிழ் நடிகர்களாகிய நாங்கள் பல்லாண்டுகள் இதைப் பாடிப்பாடிச் சிரிப்பது வழக்கம், ஆனால் இன்றைய மலையாள நாடகக் கலைஞர்கள்-நம் முடைய நாடகக் குழுக்கள் நடத்தி வரும் கோமாளிக் கூத்துக் களைக் கண்டு சிரிக்கின்றனர்!

ஆம்; அந்த அளவுக்கு மலையாளத்தில் புதுமையும் புரட்சியும் மிக்கதாக நாடகக்கலை வளர்ந்திருப்பதைக் கண்டு நாம் வெட்கப்படவேண்டும்.