பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 191

நகரங்கள் மட்டுமின்றிப் பட்டிதொட்டிகளெங்கும் நிறைய நாடகங்கள் நடைபெற்றன.

ஆனால், காலப்போக்கில் இவற்றுள் நிலைத்து நின்ற நாடகக் குழுக்கள் ஒரு சிலவேயாகும். அவற்றில் குறிப்பிடத் தக்கவை சி. கன்னையா கம்பெனி, ஜெகந்நாதய்யர்கம்பெனி, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, சீனிவாசப்பிள்ளை கம்பெனி, டி. கே. எஸ். சகோதரர்களின் கம்பெனி, நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி இவைகளேயாகும்.

இக்குழுக்களில் நடிகர்களாயிருந்தவர்களில் பலர் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தமுதலியார், ஏகை சிவசண்முகம் பிள்ளை ஆகிய ஆசிரியர்களிடமோ, அல்லது அவர்களின் வழி வந்த மாணவர்களிடமோ பயிற்சி பெற்றவர் களாகும்.

அக்காலச் சிறுவர் நாடகக்குழுக்களில், ஐந்து அல்லது ஆறு வயதுடையவர்களைக் கூட நடிகர்களாக சேர்த்துக் கொள்ளும் வழக்கம் இருந்ததால், பல சிறுவர்கள் பள்ளிக் கூடத்தையே பார்க்காதவர்களும், கையெழுத்து ப் போடக் கூடத்தெரியாதவர்களுமாக இருந்தனர். இவர்களுக்க, அ, ஆ, முதல் ஆரம்பக்கல்வி தொடங்கிக் கல்வி கற்பிக்கவும், பொது அறிவைப் புகட்டவும், தனியாக ஆசிரியரை நியமித்திருந் தனர். மற்றும் சங்கீதப்பயிற்சிக்கும் நடனப் பயிற்சிக்கும் தனித்தனியே ஆசிரியர்கள் உண்டு. உலக அனுபவமும் இலக்கிய அறிவும் பெறுவதற்காக ஒவ்வொரு குழுவிலும் ஒரு சிறந்த நூலகமும் உண்டு.

இத்தகைய பயிற்சிகளின் காரணமாக எழுத்தறிவே இல்லாத தற்குறிகளாக நாடகக்குழுவில் சேர்ந்த பல சிறுவர்கள், பிற்காலத்தில் சிறந்த நடிகர்களாகவும், பாடகர் களாகவும், நாடகாசிரியர்களாகவும், மிகச்சிறந்த கவிஞர் களாகவும் கூட விளங்கினார்களென்பது வெறும் கட்டுக்கதை யல்ல; நானறிந்த உண்மை.