பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 கவிஞர் கு. சா. கி.

ஒரு குழுவுக்கு மதுரை ஒரிஜனல் பாய்ஸ் கம்மெனி என்ற பெயர் சூட்டி, திரு. சச்சிதானந்தம்பிள்ளை பூரண உரிமையாளராகப் பொறுப்பேற்று, 1912-ம் ஆண்டு தொடங்கி 1936ம் ஆண்டுவரை மிகப்பெரிய அமைப்பாகத் தொடர்ந்து நடத்தி, பெரும் புகழும் பொருளும் குவித்தார். இக்கம்பெனியின் மூலக்கர்த்தாவான கும்பகோணம் தாப்பா வெங்கடாசல பாகவதர் என்னும் நன்னையாபாகவதர் இறுதிவரை நாடக ஆசிரியராகவும், சங்கீத ஆசிரியராகவும் இருந்து பணியாற்றினார். மேலும் தமிழ்நாடக மறு மலர்ச்சித் தந்தையென்னும் திரு. கந்தசாமி முதலியார் அவர்களும், சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் அவர் களும் இக்கம்பெனியில் பல்லாண்டுகள் ஆசிரியப் பொறுப் பேற்று, ராஜாம்பாள், சந்திரகாந்தா, மோகனசுந்தரம், ராஜேந்திரா, ஆனந்தகிருஷ்ணன் ஆகிய ஜே. ஆர். ரங்க ராஜாவின் நாடகங்களையும், கிருஷ்ணசாமி பாவலர் அவர் களின் கதரின் வெற்றி, தேசியக்கொடி, பதிபக்தி, பம்பாய் மெயில் கவர்னர்ஸ்கப், ஆகிய தேசிய சீர்திருத்த சமுதாய நாடகங்களையும், மற்றும் ராமாயணம், மகா பாரதம், தசாவதாரம், கிருஷ்ணலீலா போன்ற புராண நாடகங்களையும் மிகச் சிறப்பான முறையில் தமிழகமெங்கும் நடத்திப் புகழ்பெற்றனர்.

இக்கம்பெனியில் பல நூற்றுக்கணக்கான நடிகர்கள் தயாராயினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், கே. பி. காமாட்சி, கே. பி. கேசவன், கே. கே. பெருமாள், விகடப் பக்கிரி, கே.ஆர். இராமசாமி, காளி என். ரத்தினம், எஸ்.ஏ பொன்னுசாமி, பி. யு. சின்னப்பா, டி. ஆர். பி. ராவ், எம். ஆர். சாமினாதன், எம்.ஜி.சக்ரபாணி, அன்னாரின் இளவலும் மறைந்த தமிழகத்தின் முதலமைச்சருமாகிய புரட்சி நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன், போன்ற இன்னும் எத்தனையோ கலைஞர்களைத் தமிழகத்திற்குத் தந்த பெருமை, இக்குழுவி னருக்கு உண்டு. இந்தக் கலைஞர்களில் பலர் திரைப்படத் துறையின் தொடக்ககாலத்திலிருந்து இன்றுவரைதொடர்ந்து பெரும் புகழ் பெற்று வந்தனர் என்து. தமிழ் நாடக உலகம் அறிந்த உண்மையாகும்.