பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 209

மற்றும் சிலம்பில் வரும் வழக்குரை காதையில் தன் கணவனுக்கு நேர்ந்த அநீதியை எதிர்க்கும் வீராங்கனை யாகவே காட்டப் பெறும் கண்ணகியை, சுவாமிகளின் நாட கத்தில் காளிதேவியாகவே காட்சிப்படுத்திக் காட்டுகின்றார். இதற்குக் காரணம் சிலம்பில் இளங்கோ வாயிற்காவலன் வாயுரையின் மூலம் கண்ணகியின் தோற்றத்தை காட்சிப் படுத்திக் காட்டுகின்றாரே:

'அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி, வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள் அறுவர்க்கு இளைய நங்கை-இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு-சூர் உடைக் கானகம் உகந்த காளி-தாருகன் பேரூரம் கிழித்த பெண்...'

என்றெல்லாம் கூறும் இளங்கோவடிகளின் கூற்றையே சற்று அதிகமாக மிகைப்படுத்திக் காளியென்றே கற்பிக் கின்றார் சுவாமிகள். பின்னே வரும் இந்த மாற்றத்தை மனதிற் கொண்டுதான் கண்ணகியின் பிறப்பிலேயே அமானுஷ்யத் தன்மையையும், பிறகு திருமணத்திற்குப் பின்னரும் இல்லற இன்பத்தில் ஆழ்த்திக் காமச் சகதியில் புரளவைத்துக் களங்கப்படுத்தாமல், கண்ணகியின் புனி தத்தை நாடகம் முழுவதிலும் கட்டிக் காத்து வருவதையும் காணுகின்றோம்.

அதுமட்டுமன்றி, மழைவரம் நல்கிய மாரித் தெய்வ மென்று நாடெங்கும் போற்றிப் பரவிய கண்ணகியின் கோயில்களே, இன்று மாரியம்மன், காளியம்மன், ரேணுகா பரமேஸ்வரி என்ற பெயர்களிலெல்லாம் வழங்கப் பெறுவ தாக ஆய்வு பூர்வமாக இன்று எடுத்துக் காட்டப்படும் ஐயப்பாடு, சுவாமிகள் மனத்திலும் தோன்றி, அதன் காரண மாகக் கண்ணகியே காளியென்னும் கருத்தை வலியுறுத்தி யிருக்கவும் கூடுமென்று நினைக்கின்றேன்.