பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 கவிஞர் கு. சா. கி.

காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார் அவர்கள் 1943-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை பூரீராம பால கான சபா என்னும் நாடக நிறுவனத்தை நடத்தினார்.

இந்த நிறுவனத்தில், திருமழிசை ஆழ்வார், ஏழைப் பெண், தாகசாந்தி, குடும்ப வாழ்க்கை, புயலுக்குப் பின், பக்த சாருகதாசர், புரட்சி, இன்ப இரவு, பிலோமினா, விஜய நகர சாம்ராஜ்யம், எதிர்பார்த்தது, அன்னை, ஆகிய பல அருமையான நாடகங்களை நடத்திப் புகழ் பெற்றார்.

ஆர். முத்துராமன், எஸ்.எம். ராமநாதன், குலதெய்வம் ராஜகோபால், எம்.என். நம்பியார், கே.ஆர். ராம்சிங், சாயி சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் போன்ற நல்ல

ராமன்.

மனோரமா, எம்.எஸ். எஸ். பாக்கியம்

நடிகர்களையும், போன்ற நகைச்சுவை நடிகைகளையும், நல்ல எழுத்தாளர் நாஞ்சில் ராஜப்பாவையும் இந்த நிறுவனம் உருவாக்கிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் நின்றபின், ஆர். முத்துராமன், ராமனாதன்,குலதெய்வம்ராஜகோபால் போன்ற நடிகர்களின் கூட்டு நிர்வாகத்தில் வைரம் நாடக சபா என்ற பெயரில் சில காலம் நடத்தி, நீதிபதி, சந்திப்பு, கடமை, சாந்தி, கட்ட பொம்மன் ஆகிய பல நாடகங்களை அரங்கேற்றினர். இந்த நிறுவனமும் நீடித்து நடத்த முடியாமல் சில மாதங்களில் நிறுத்தப்பட்டது.

டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக்குழு, ஈரோட்டில் 1944ம் ஆண்டு திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர் களின் தலைமையில், மிகச் சிறப்பாக நாடகக் கலை முதல் மாநாடு நடத்தியதை முன்பே குறிப்பிட்டுள்ளேன். இரண் டாவது நாடக மாநாடு, தஞ்சைகரந்தையில் அடுத்த ஆண்டி லேயே நடந்தது. இதையடுத்து அதே 1945-ம் ஆண்டு இறுதியில் மிகச் சிறப்பாக மூன்றாவது நாடக மாநாடு, வைரம் செட்டியார் நாடகக் குழுவின் ஆதரவில் சென்னையில்