பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 கவிஞர் கு.சா.கி.

மற்றும், கண்டிராஜன், அலிபாதுஷா, அரிச்சந்திரன், நல்லதங்காள் போன்ற துன்பியல் நாடகங்களில் வரும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள், அந் நாடகங்களின் அவலச் சுவையை மிகைப்படுத்தி, மக்களிள் அனுதாபத்தை யும் ஆதரவையும் பெறுவதற்கு எந்த அளவுக்குத் துணை செய்தனவென்பது அந்த நாடகங்களைப் பார்த்து அனுபவித் தவர்களுக்கே தெரியும்.

குழந்தைகளின் நடிப்புத்திறன் ஒரளவே இருந்தாலும், அதைப் பன்மடங்காகக் கற்பித்து ரசிக்கும் மனோபாவம் எல்லோரிடமும் சராசரியாக அமைந்திருப்பதை, இயற்கை யாகவே நாம் இன்றைக்கும் காணமுடிகிறதல்லவா!

அதனால்தான் குழந்தைகள் கதைகள் மட்டுமின்றி, எல்லா விதமான கதைகளிலும், சிறுவர்களையே பல்வேறு பெரியவர்களின் பாத்திரங்களையும் ஏற்று நடிக்கச் செய்து மக்களின் அமோக ஆதரவைப்பெற்று, இருபதாம் நூற்றாண் டின் முற்பகுதியாகிய அரை நூற்றாண்டு காலம்வரை, 'பாய்ஸ் கம்பெனி'கள் என்ற சிறுவர்களின் நாடக நிறுவனங்கள் கொடிகட்டிப் பறந்தன.

ஒளவை சண்முகம் ஆறுவயது சிறுவனாக இருக்கும் போதே, அவர் கதாநாயகனாக நடிப்பதற்கென்றே, சங்கர தாஸ் சுவாமிகள் அபிமன்யு சுந்தரி என்ற நாடகத்தை எழுதித் தயாரித்தார் என்ற செய்தியும், ஏழு வயதிலேயே எஸ். ஜி. கிட்டப்பா அவர்கள் கிருஷ்ணனாக நடித்துப் பெரும் புகழ்பெற்றார் என்ற செய்தியும், குழந்தைகளின் நடிப்பாற்ற லில் மக்கள் கொண்டிருந்த அதீத ரசிகத்தன்மையைத்தான் நிரூபிக்கின்றது.

குழந்தைகளின் நடிப்பாற்றலில் மக்கள் இத்தனை ரசனை மிக்கவர்களாய் இருந்தும், அந்தத் துறையில் புதிய உத்திகள், புதிய முயற்சிகள், புதிய நாடகங்கள் தோன்ற வில்லையே என்ற கேள்வி எழலாம்; எப்படி முடியும்: சுவரை வைத்தல்லவா சித்திரம் எழுத வேண்டும்!