பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 கவிஞர் கு. சா. கி.

எதிரே ஒரு அழகிய இளம் வாலிபன் திறந்த கண் மூடாமல் அவளையே எடுத்து விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டு மெய்மறந்து நிற்கிறான். நிலைமையைப் புரிந்துகொண்ட கோயில் அர்ச்சகர், அந்த வாலிபனை அணுகி, ஒரு பெருந்தொகையைப் பேரமாகப் பேசி, அந்த பெண்ணின் உறவினரையும் சம்மதிக்க வைத்து, அந்த வாலிபனை அன்றிரவு அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அழைத்துப் போகிறார். மகா பதிவிரதையாகிய அந்தப்பெண் இதற்கு இணங்கமாட்டாள் என்பதை உணர்ந்த உறவினர்கள் அர்ச்சகரின் ஆலோசனையின்படி, பாலில் மயக்க மருந்தைக் கலந்து அருந்தச் செய்து விடுகின்றனர். உணர்ச்சியற்ற நிலையில் இருந்த அந்தப் பெண்ணுடன் அந்த வாலிபன் உறவு கொள்ளும் கொடுமைக்குத் துணைபுரிகின்றனர்.

மிருகவெறி தீர்ந்தபின், அந்த வாலிபனுக்கு மனித உணர்ச்சி தலையெடுக்கிறது. ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனை அச்சுறுத்துகிறது. தான் செய்த தவறுக்காக அவன் தன்னைத் தானே நொந்துகொள்கிறான். அவள் மயக்கம் தெளிந்து எழுந்தபின், தான் கெடுக்கப்பட்டதை உணர்ந்தால் நிச்சயம் தற்கொலை செய்துகொள்வாள் என்று நினைத்து நடுங்குகிறான். அவள் மயக்கம் தெளியும்வரை காத்திருந்து தான் செய்த தவறுக்காக அவள் கொடுக்கும் எந்தத் தண்டனையையும் ஏற்றுக்கொள்வதே சரியான பரிகாரமாகும் என்று நினைக்கிறான். எப்படியும் அவளைத் தற்கொலையி லிருந்து தடுக்கவேண்டும் என்றும் உறுதிகொள்ளுகிறான்.

அந்தப் பெண்ணுக்கு மயக்கம் தெளிகிறது. மெல்ல மெல்ல உணர்ச்சி திரும்புகிறது. கண்ணைத் திறந்து பார்க் கிறாள். எதிரே ஒரு இளம் வாலிபன். தனிமையில் தாளிடப் பட்ட அறை. ஒரே வினாடியில் அவளுக்கு எல்லாம் புரிந்து விடுகிறது, புழுவாய்த் துடிக்கிறாள். மும்டி மோதிக்கொண்டு அரற்றுகிறாள். அடிபட்ட நாகம்போல் சீறுகின்றாள். அந்த வாலிபன் கூனிக்குறுகி, உள்ளமும் உடலும் நடுங்கக்