பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமரர் தொலைபேசி : 76749

எம். கே. இராதா 4. பிருந்தாவன் தெரு, சென்னை-4.

31-8-77

எனது அன்பிற்குரிய சகோதரன் திரு. கு. சா. கிருஷ்ண மூர்த்திக்கு அநேக ஆசீர்வாதம்.

சென்னைப் பல்கலைக் கழகம் ஆண்டுதோறும் நடத்தி வரும் பம்மல் சம்பந்த முதலியார் அறக்கட்டளைச் சொற் பொழிவுக்கு இந்த ஆண்டு உன்னைத் தேர்ந்தெடுத்திருப்பது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.

அந்த அழைப்பிதழைப் படித்ததும் எனக்கு நமது இளமைப் பருவ நிகழ்ச்சிகளெல்லாம் நினைவில் வந்து

நிழலாடியது.

அன்று, அப்பாவின் ஆணைப்படி-நாடிகப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும்போதும் ஒத்திகை பார்க்கும்போதும் எத்தனையோ முறை உன்னைக் கண்டித்தும் தண்டித்தும் ஏன் அடித்தும்கூட இருக்கிறேன். ஆனால் இன்று உன்னை கவிஞனாக-நாடகாசிரியனாக-பல்கலைக் கழகப் பேச்சாள னாகக் காணும்போது என் உள்ளம் பெருமித மடைகிறது. ஆனந்தக் கண்ணிர் துளிர்க்கினறது. தம்பி டி. கே. சண்முகத்தை நினைக்கும்போதும் இதே நிலையில்தான் என்னுள்ளம் பெருமையில் பூரிக்கின்றது. உடல் இடம் கொடுத்தால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

எனது மனப்பூர்வமான ஆசிகள் உனக்கு எப்போதும் உண்டு. -

உன் அன்புச் சகோதரன் எம். கே. இராதா