பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

இது எனது வாழ்க்கையில் மேற்கொண்ட நாடக மேடை தொடர்புக்கு மட்டுமன்றி, புதுக்கோட்டை விடுதலை போராட்டக் களத்திலும்புதுக்கோட்டை சமஸ்தான காங்கிரஸ் நடத்திய இணைப்புப் போராட்டத்திலும் நான் பங்குபெற்ற போராட்டங்களை நினைவு படுத்துவதற்கு எடுத்துகாட்டாக வும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிகழ்ச்சியாகவும் இருப் பதால்தான் இவற்றை மீண்டும் நினைவு கூர்ந்துள்ளேன்.

இந்நூல் வெளியீட்டிற்கு மானிய உதவி வழங்கிய தமிழ்நாடு இயலிசை நாடக மன்றத்தினருக்கும் நூல் வெளி யீட்டிற்கு பெரிதும் துணைபுரிந்த பூங்கொடி பதிப்பக உரிமையாளர் திரு. வே. சுப்பையா அவர்களுக்கும் இந் நூலை அழகிய முறையில் அச்சிட்டுக் கொடுத்த பூங்கொடி அச்சகத்திற்கும் எனது நன்றி உரியதாகுக!

சென்னை-4 அன்புள்ள

நாள்: 20.12.1989 கு. சா. கிருஷ்ணமூர்த்தி