பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசியத்திலகமும் விடுதலை வீரரும் நடிகருமாகிய திருமிகு எஸ். எஸ். விஸ்வநாததாஸ் அவர்கள் 31-12-40 செவ்வாய்ன்று இரவு சென்னை அரங்க மேடையில் சேவற்க் கொடியோன் வேடத்தோடு அமரரானது குறித்து அவருக்கு புதுக் கோட்டை மக்கள் சார்பில் நடந்த இரங்கற் கூட்டத்தில் கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இயற்றி அச்சிட்டு இசையோடு பாடி வழங்கிய நவரத்ந இரங்கற்பா.

உத்தமர் காந்தியண்ணல் உண்மை யி னெறியையோர்க்த சத்யனே விஸ்வனாத தாசெனும் பெயர்படைத் த வித்தக மணிநீஈசன் வீடடைச் செய்திகேட்டுன் மித்திர நடிகரோடும் மேதினி யோரும்கொங்தார்!

இயலிசை நாடகத்தின் இனிமையை உலகத்தோர்க்கு நயம்பெற எடுத்துக் காட்டி நடித்திடுங் கலைவல் லோனே மயல் தருங் தேசபக்தி மலிங் தனின் மறைவைக் கேட்டோர் துயர்மிகுங் கடலில் வீழ்ந்தத் துரும்பெனத் தியங்கலுற்றார்!

அரங்கமா மேடையேறி அன்னியர் கொடுமை தன்னை பறையறை வித்துப்பாவால் பகர்ந்தனை பாரிலிதால் சிறைபல முறைகி சென்று சிறப்பினை படைங்தாய்!-துாய பொறைமிகுங் குணக் கொழுங்தே புவிபுகழ்த் தியாக முர்த்தி!