பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/59

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



சென்னைப் பல்கலைக் கழகத்தின் அறக்கட்டளைச் சொற்பொழிவு

தமிழ் நாடகக் கலையின் தோற்றம்

அன்புசால் அவைத் தலைவர் அவர்களே, பெரியோர்களே. தாய்மார்களே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவார்ந்த வணக்கம்.

உலகின்கண்ணுள்ள சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றாக ஒப்பிட்டுப் பேசும் பெருமைபெற்ற இந்த சென்னைப் பல்கலைக் கழகத்தில், ஒப்பற்ற கலைவல்லார்கள், காவியப் பெரும் புலவர்கள், பல்துறைப் பேரறிஞர்கள் பல்லோர் கருத்துரைகள் வழங்கிச் சிறப்பித்துள்ள இம்மாமன்றத்தில், எனக்கும் பேசுவதற்கு வாய்ப்பளித்துப் பெருமைதந்த துணை வேந்தர், பதிவாளர், தமிழ்த்துறைத் தலைவர், பரிந்துரைக் குழுவினர் ஆகிய அனைத்துப் பெருமக்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கங்களைச் செலுத்திக்கொள்ளக் கடமைப்பட்டவனாவேன்.