பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 59

தமிழின் தொன்மையும் வன்மையும் எளிமையும்

'பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள'

என்று வஞ்சிக்கோமகன் இளங்கோவடிகள் நெஞ்சக்குமுற லுடன் கூறியதும், கடற்கோளால் அழிந்து பட்டதும், நாவலந் தீவின் தென்பகுதியுமாகிய இலமூரியாக் கண்டம் தான் உலகில் முதல்முதல் மனித இனம் தோன்றிய நிலப் பகுதியென்றும், அந்த ஆதி மனிதர்கள்தான் தமிழினத்த வர்கள் என்றும், அவர்கள் பேசிய மொழியே தமிழ்மொழி யென்றும், அத்தமிழ் மொழியே உலகில் மனித இனம் கண்ட முதல்மொழி என்றும், நிலவியல் அறிஞர்களும், உயிரியல் ஆய்வாளர்களும், மொழியியல் வல்லுநர்களும், ஐயத்திற் கிடமின்றி நிரூபித்துள்ளனர்.

ஆயினும், அம்மாமேதைகளும்கூட, அத் தமிழ்இனமும், தமிழ்மொழியும் தோன்றிய காலத்தைத் துல்லியமாக அறுதியிட்டுக் கூறவியலாது திகைக்கின்றனர்.

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம்

பொருளாய்ப்

பின்னைப் புதுமைக்கும் பெயர்த்துமப் பெற்றியனே' என்று மணிவாசகப்பெருமான் இறைவனின் தொன்மை குறித்துச் சொல்லியதும்,

"தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை

வாணர்களும்-இவள் என்று பிறந்தவன் எண்றுணராத இயல்பினளாம் -

எங்கள் தாய்' என்று அமரகவி பாரதி பாரத அன்னையைக் குறித்துப் பாடிய பாடலும் தமிழ்த்தாயின் தொன்மைப் பெருமையை விளக்குதற்குப் பொருந்துவனவாய் அமைந்திருப்பதைக் காணுகின்றோம்.