பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 63

வாழ்க்கையின் விளக்கம், வரலாற்றின் பொன்னேடு, கற்பனைக் கருவூலங்களை விளக்கும் அற்புத ஒளிவிளக்கு, உலகக் கலையனைத்தையும் தன்னகத்தே கொண்ட உயிரோ வியம், ஞானக்கலை புகட்டும் நற்பள்ளி, காதற் கருவூலம். கலைகளின் பிறப்பிடம், தத்துவங்களின் சித்திரக்கோவை, உண்மையின் ஒளிப்பிழம்பு, உணர்ச்சிகளின் உயிர்த்துடிப்பு என்று இன்னும் எத்தனை எத்தனையோ கற்பனைவர்ணனை களை அடுக்கிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்புக் களுக்கும் உரிய ஆற்றல்கள் அனைத்தும் பெற்ற அரிய கலை தான் நாடகக் கலை.

ஆயகலைகள் அறுபத்து நான்கென்றால் அக்கலைகளின் ஒருமித்த மொத்த வடிவமாகநிலைபெற்றுத் திகழ்வதால்தான் கலைகளுக்கெல்லாம் தலையாயகலை நாடகக்கலையே என்று அறிஞர்கள் கூறுகின்றனர். நாடகக்கலையின் தோற்றுவாய், நாடக உத்தி, நடிப்பு, உணர்ச்சி எப்போது தோன்றி யிருக்கக்கூடும், எப்படித் தோன்றியிருக்கக்கூடும் என்பதைப் பற்றிச் சற்று ஆழமாகச் சிந்திப்போமானால், மனிதர்கள் எப்போது இவ்வுலகில் தோன்றினார்களோ-கூடிவாழத் தொடங்கினார்களோ, அப்போதே இந் நடிப்புக் கலையும் தோன்றியிருக்கலாம் என்பதை அனுமானத்தால் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு மனிதன் செய்த வீரசாகசத்தைப் பற்றிப், பிறிதொரு மனிதனுக்கு விளக்கிக்கூற முற்படும் ஒருவன், அவனது அற்புதச் செயல்களை நினைக்கும்போதே வியப்பைத் தன் விழிகளில் காட்டுகின்றான். பிறகு அந்த மனிதன் ஒரு பயங்கர மிருகத்தை எதிர்த்து வெற்றிகொண்டு வீழ்த்திய நிகழ்ச்சியையோ-அல்லது-பலபேர்களை எதிர்த்து வீழ்த்தி யதையோ விளக்குவதற்குத் தனது விழிகள், முக்க் குறிப் ಆಹ್ರಹ அங்க அசைவுகள், ஒலி அல்லது சொல்லாற்றல்கள் மறறும கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தல் ஆகிய பல்வேறு மெய்ப்பாடுகளால், தான் கண்ட வியத்தகு செய்திகளை விளக்குவதற்கு முற்படுகிறான். இங்கேதான் பிறக்கிறது