பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கவிஞர் கு. சா. கி.

விருத்தங்களுமே நிறைந்தவைகளாக இருந்ததால் அதில் வரும் பாத்திரங்கள் அனைவருமே, அந்தப் பாடல்களில் வரும் தாள சந்த பேதங்களுக்குக்கேற்ப மேடையில் ஆடிக் கொண்டே நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததால், கூத்து என்ற சொல் வழங்கியது போலும்.

நமது பழைய நாடகங்கள் அனைத்தும் பாடல்களும் கவிதைகளுமே நிறைந்ததாகவும், உரையாடல்களே இல்லா திருப்பதும், பெருங்குறையுடையதாகக் கருதும் ஒரு சில மேதைகளின் விமர்சனங்களை நான் கேட்டிருக்கிறேன். அது தமிழுக்குள்ள குறையென்று நினைப்பதைவிட, அதுதான் தமிழுக்குள்ள சிறப்பென்று கொள்வதே பெருமையாகக் கருதுதல் வேண்டும். காகிதம், எழுதும் கருவிகள், அச்சக யந்திரம் போன்ற வசதிகள் தோன்றாத அந்தக் காலத்தில் நமது இலக்கியங்கள் அனைத்துமே செய்யுள் வடிவில்தான் அமைந்திருந்தன.

அப்படி அவைகள் ஒரு கட்டுக்கோப்பான கவிதை வடி வினதாக அமைந்திருந்ததால்தான், அவைகள் எளிதில் மனனம் செய்யத் தக்கனவாயும், செவிவழிச் செல்வமாகச் சேமித்துக் காத்து வைப்பதற்குச் சுலபமானதாகவும் இருந் தனவென்பது கண்கூடு. இது நாடக, நாட்டிய, இலக்கியங் களுக்கு மட்டும் எங்ங்னம் விதி விலக்காக இருக்கமுடியும்.

நாடகம் என்ற சொல்லை, நாடு + அகம் என்று பிரித்து முன் கூறியதைப் போலவே, நாட்டியம் என்ற சொல்லையும், நாடு + இயல் என்று பிரித்து நாட்டின் இயலைப் பிரதிபலித் துக்காட்டும் கலை என்று சுட்டிக் காட்டலாமென நினைக் கிறேன்.

அதாவது நாடு + இயல் என்னும் இருசொற்கள் நாட்டி யல் என்று ஆகி, பின் இயல் என்னும் சொல்லில் உள்ள, -ல் -என்ற எழுத்து, -ம்-மாக மருவி, நாட்டியம் என்ற சொல் வழக்கில் வந்திருக்கக்கூடுமென்று கருதுகிறேன்.