பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 73

பரப்புதற்கே இத்தகைய அற்புதக் கற்பனைகளையெல்லாம் புனைந்தனர் போலும்.

ஒப்புயர்வற்ற பரம்பொருளோடு இணைத்து வைத்துப் போற்றி வளர்க்கும் பேறுபெற்ற கூத்துக்கலையைத் தமிழர் கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர். அக்கலையில் சிறந்திருந்தனர் என்பதற்குப் பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணும் குறிப்புக்கள் சான்று பகர்வனவாய்த் திகழ்கின்றன.

மனிதனின் வாழ்க்கைத் தேவையின் பூர்த்திக்குப் பிறகும், அவன்,சிந்தனைக்கு விருந்தாக இத்தகைய கவின்கலைகளை அக்காலத்திலேயே வளர்த்துக் கொள்வதில் ஆர்வமுள்ளவனா யிருந்திருக்கிறான் என்று உணருகின்றோம்.

கூத்துக் கலை

கூத்துக் கலையைப் பல்வேறு மாறுபட்ட முறைகளில் கையாண்டு மக்களை மகிழ்விக்கச் செய்தார்கள் . அவை யாவன:-1 மரப்பாவைக் கூத்து, 2. மண்பாவைக் கூத்து, 3. துணிப்பாவைக் கூத்து, 4. தோற்பாவைக் கூத்து ஆகிய

வையாம்.

மரப்பாவை கூத்து- கல்யாண முருங்கை போன்ற கனமற்ற மரங்களில் கதைக்கேற்ற பாத்திரங்களாகப் பொம்மைகளை அமைத்து, அந்தப் பாவைகளின் கழுத்து, கால்கள் முதலிய அவயவங்களைத் தனித்தனியே பொருத்தி, மேற்படி அவயவங்களை நினைத்தபடி திருப்பவும், மேலும் கீழுமாகத் தூக்கவும் இறக்கவும் வசதியான முறையில் அமைத்து, கதையை இசைப்பவனின் கருத்துக்கேற்ப, மேற் படி பாவைகளை இயற்கையான மனிதனைப்போல் கைகளை வீசியும் அசைத்தும், கால்களால் நடந்தும் நடிக்கவைத்துக் கதையை நடத்திக் காட்டுதல்.

த.நா.-5