பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கவிஞர் கு. சா. கி.

ஆனாலும், அதனைப் படிக்கும் நாடக இலக்கியமாக மட்டுமே கொள்ள முடியுமேயல்லாது, நடிக்கும் நாடகமாகவோ கற்றோரேயன்றி மற்றோரும் புரிந்துகொண்டு சுவைக்கும் எளிமையுடையதாகவோ கொள்ளுதல் இயலாது.

நடிக்கும் நாடகத்திற்குக் கையாளப்படும் செய்யுள் களும், இசைப்பாடல்களும், உரையாடல்களும் படித்தவர் கள் முகம்சுளிக்கும் கொச்சைத் தமிழாகவோ, பாமரர்கள் புரிந்துகொள்ள முடியாத பண்டிதத் தமிழாகவோ, இல்லா மல், இரு தரத்தினருக்கும் இடைப்பட்டதாக, எல்லோரும் எளிதில் புரிந்து சுவைக்கத் தக்கதாக எழுதப்படுவதே. நாடகத்தமிழ் என்பது எனது திடமான நம்பிக்கை.

சிலப்பதிகாரம் தோன்றிய இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் நடைக்கும், இன்றைய தமிழ் நடைக்கும் உள்ள வேறு பாடே இதற்குக் காரணமாயிருக்கலாம் என்றாலும், இன் றைய நிலையில் நமக்குள்ள இயலாமையை ஒப்புக்கொள்ளத் தானே வேண்டும்!

நடனமே நாடகம்

கூத்து என்னும் சொல், நாட்டியம் நாடகம் ஆகிய இரு கலைகளுக்கும் பொதுவானதாகவே வழங்கப் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் முழுக்க முழுக்க நடனக் கலைமகளாகவே அறிமுகம் செய்யப்படும் மாதவியை,

நாடக மேத்தும் நாடகக் கணிகை' -என்று இளங்கோவடிகள் குறிப்பதைக் கொண்டும்,

நடமே நாடகம் கண்ணுள் கட்டம் படிதம் ஆடல் தாண்டவம் பரதம் ஆலுதல் தூங்கல் வாணி குரவை நிலையம் கிருத்தம் கூத்தெனப் படுமே -என்று திவாகரம் தரும் விளக்கத்தைக் கொண்டும் அறியக்

கூடும்.