பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 79

ஒரு சிற்றிலக்கியத்திற்கும் ஒரு பேரிலக்கியத்திற்கும் ஒரு சிறுகதைக்கும் ஒரு பெரும் நாவலுக்கும், ஒரு ஓரங்க நாடகத்திற்கும் ஒரு பெருங்கதை

நாடகத்திற்கும், ஒரு சிறு கவிதைக்கும் ஒரு பெருங்கவிதைக்

காவியத்திற்கும்

எத்தனை வேறுபாடுகள் உண்டோ, அத்தனை வேறுபாடுகள் நடனக் கலைக்கும் நாடகக் கலைக்கும் உண்டு. ஆயினும், இரு கலைகளையும் ஒன்றாகவே இணைத்துக் கூறுவதற்குக் காரணம், இருதுறையிலும் உள்ள கலைஞர்களுக்கும் பொது வாகத் தேவைப்படும் சிறப்புத் தகுதிகளே.

ஆடலும் பாடலும் அழகும் என்றுக்

கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல் என்று, இளங்கோவடிகள் சிலம்பு அரங்கேற்றக் காதையில் கூறும் திறம் இருதிறத்துக் கலைஞர்களுக்கும் தேவை. அத் திறமற்றோர் இத்துறைகளில் வெற்றி காணார்.

மன்னர்கள் வளர்த்த மாபெருங்கலை

மிக நீண்ட நெடுங்கால வரலாற்றுச் சிறப்பும், எக்காலத் தி லும் மக்களின் மனத்தைக் கவர்ந்திடும் ஆற்றலும் கொண்ட இக்கூத்துக் கலைகள், முற்காலத்தில் பெரும்பாலும் மன்னர்களின் பேராதரவு பெற்றே வளர்ந்து வந்துள்ளன.

பழந்தமிழர்களின் பண்பாடுகளையும், வாழ்க்கை நெறி களையும், அறம் பொருள் இன்பம் ஆகிய இயற்கைக் குறிக் கோளையும் பிரதிபலித்துக் காட்டும் கதையம்சங்களையும், அரசர்களின் பெருமைகளையும், வெற்றிச் சிறப்புக்களையும், அந்தந்த நாட்டு மன்னர்களின் வீரப் போர்த்திறங்களையும், அப்போரில் தோற்றோடிய மன்னர்களின் அவல நிலைகளை யும், மற்றும் நல்லோர்களின் உயர்வையும், தீயோர்களின் தாழ்வையும் கதைகளின் கருப்பொருளாகக் கொண்ட