பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கவிஞர் கு. சா. கி.

வரலாற்று நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டே பாவைக் கூத்துக்களும் நாட்டிய-நாடக நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. பின் காலப்போக்கில் ஆரிய கலாச்சாரப் படை யெடுப்புத் தமிழர்களின் எல்லாத் துறைகளிலும் மெல்ல மெல்லப் புகுந்து மாற்றங்களை உண்டாக்கியது போல், இசை நாட்டியம் நாடகம் ஆகிய துறைகளிலும் படிப்படியாக மாற்றங்கள் நிகழ நேர்ந்ததையும், அம்மாற்றங்கள் நாள் தோறும் வளர்பிறையாக வளரும் துர்ப்பாக்கிய நிலையையும் காணுகின்றோம்.

தமிழிசை, கர்நாடக இசையென்று பெயர் பெற்றது. மேடைகள் தோறும் வேற்றுமொழிப் பாடல்களேயன்றி, நாட்டு மொழிப் பாடல்களைப் பாடுவோரே அரிதாகி விட்டனர்.

நாட்டிய அரங்குகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜாவளி தில் லானா, பதம் என்ற பெயர்களில் கீழ்த்தரமான-காம உணர்ச்சியைத் தூண்டும் விரசம் மிகுந்த பிறமொழிப் பாடல் களே அதிக அளவில் இடம் பெறலாயின.

நாடக அரங்குகளிலும் இதே நிலை வளரலாயிற்று. இயற்கைத் தன்மையும், வரலாற்று உண்மையும் கொண்ட வீரமும் காதலும் விரவிய கதைகள் அருகி, அமானுஷ்யத் தன்மைகள் நிறைந்த புராண இதிகாசக் கதைகளே பெரும் பாலும் இடம் பெறலாயின. சனாதன மதப்பற்றும், புராண இதிகாச நம்பிக்கையும், மன்னர்களிடத்தும் மக்களிடத்தும் பரவப் பரவ, இக்கவின் கலைகளையும் அவற்றின் கருத்தைப் பரப்புவதற்கான கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டனர் போலும்!

ஆம்; காலப் போக்கில் இதன்மூலம் கணிசமான வெற்றி யைக் கண்டனர் மாற்றார். கலப்படக் கலாச்சாரத்தின்

குழப்பத்தில் ஆழ்ந்தது தமிழகம்.