பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 81

தேசீயக் கலை தெய்வீகக் கலையாயிற்று:

இந் நிலையில்தான் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் பாரதநாடு சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டுவரை, சுமார் 1700 ஆண்டுகள் தமிழினத்தின் அரசியல், கலை, கலாசாரம், பண்பாடு, இலக்கியம், மொழி ஆகியவற்றுக்குப் பெரும் சோதனை நேர்ந்தது.

களப்பிரர், பல்லவர், சாளுக்கியர், ஆந்திரர், மராத்தியர், மொகலாயர், போர்ச்சுக்கீசியர், பிரெஞ்சுக்காரர், டச்சுக் காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் அரசியல் படையெடுப்புக் களும்,

சமணம், பெளத்தம், இஸ்லாம், கிருத்துவம் ஆகிய மதப் படையெடுப்புக்களும்,

சமஸ்கிருதம், பாலி, பிராக்ருதம், தெலுங்கு , கன்னடம், மராத்தி, உருது, ஆங்கிலம் ஆகிய பிற மொழி ஊடுருவல் களும், தமிழர்களின் கலை இலக்கியக் கலாச்சாரம் சிதைந்து போவதற்குப் பெரிதும் காரணமாய் அமைந்துவிட்டன.

இத்தனை நீண்ட நெடுங்காலத் தாக்குதல்களுக்கு ஆட் பட்டும், தனது பெருமையை இழந்துவிடாமல், தமிழ்மொழி இன்னும் குன்றாத வளத்துடன் திகழ்வதற்குக் காரணம், தமிழுக்கே உரிய தனித்தன்மையும், இலக்கணக் கட்டுக் கோப்புமே ஆகும்.

ஆயினும், இசை, நாட்டியம், நாடகம் போன்ற கவின் கலைகள் அன்னியர்களின் ஆட்சியாலும், பிறமதங்களின் ாக்குதல்களாலும், வேற்றுமொழிக் கலாச்சாரக் கலப்பினா லும், தமக்கே உரிய தனித்தன்மையை இழக்கவேண்டிய நெருக்கடி நேர்ந்த போதுதான், நமது அருங்கலைகளாகியஇசைக்கலையும், நாட்டியக்கலையும், நாடகக்கலையும் ஆண்டவனின் ஆலயங்களில் அடைக்கலம் புகுந்தன.