பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கவிஞர் கு. சா. கி.

ஆம்; அரசர்களின் அதிகாரத்தையும் மிஞ்சிய அந்தஸ்து ஆண்டவனுக்கு உண்டல்லவா? எனவே, அங்கு கலைகளின் புனிதத்தன்மை காப்பாற்றப்படும் என்று அக்கால அறிஞர் பெருமக்கள் நினைத்தனர் போலும்!

எனவே, வேற்றரசர்களின் வெறித்தாக்குதலுக்கும், மாற்று மதங்களின் ஊடுருவல்களுக்கும் ஓரளவு தப்பிப் பிழைத்தன நம் கவின் கலைகள்.

ஆயினும் என்ன? இந்துக்கள் என்னும் உரிமையோடு வேற்றினத்தவர்களும் வேற்றுமொழியினர்களும் நமது கோயில்களில் ஆதிக்கம் பெற முடியுமல்லவா?

அர்ச்சகர் முதல் அறங்காவலர் வரை வேற்றினத்தவர், வேற்று மொழியினர், நாளடைவில், படிப்படியாகப் பெருகி னர்.

இசைக் கலைஞர்கள், நாட்டிய நடிகைகள், நாடக நடிகர்கள், நாதசுரத் தவில் கலைஞர்கள் ஆகியோருக்குக் கோயில் படித்தரங்களும், மானியங்களும் நிரந்தரமாக வழங்கப்பெற்றன.

தெய்வீகக்கலை சிற்றின்பக் கலையாயிற்று:

இக் கோயிற் கலைஞர்கள் எல்லோருமே இறைவனுக்குக் கலையின் மூலம் தொண்டு செய்வதற்கென்றே தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்கள் என்று சொல்வதுதான் வழக்கம்.

அதிலும் குறிப்பாக ஆ ட ற் க ைல க் .ெ க ன் று தேர்ந்தெடுக்கப் பெறும் அழகும். இளமையும், ஆடற் கலைத்தேர்ச்சியும் உள்ள நங்கையர்களைக் கோயில் தாசியரென்ற சிறப்புக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்து, அவர்களின் அழகு, இளமை கலைத் திறம் அனைத்தும் ஆண்டவனுக்கே அர்ப்பணம் செய்து விட்டவர்கள் என்பதற்கு அடையாளமாக, அவர்களை இறை