பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கவிஞர் கு. சா. கி.

பொருள் பொதிந்த பாடல்களைப் பாடி அபிநயித்துப்

பக்தர்களின் மனத்தைப் பண்படுத்த வேண்டிய கடமையை மறந்து, காண்போரின் உள்ளத்தில் காமவெறியைத் தூண்டி விடும் விரசமிகுந்த ஜாவளி, தில்லானா போன்ற தெலுங்கு, கன்னடம் ஆகிய வேற்று மொழிப் பாடல்களையும், பதம் என்ற பெயரால் சில தமிழ்ப் பாடல்களையும் பாடி நடித்து, விபச்சார வியாபாரத்திற்கே விளம்பர சாதனமாக நாட்டியக் கலையைப் பயன்படுத்தும் இழிநிலையை, நம் புனி தமான ஆலயங்களிலே வளர்த்து வந்தனர். சமுதாயத் தலைவர்களே இதற்குத்துணையாகவும், தூண்டுகோலாகவும் இருந்தனர் என்ற வெட்கக்கேட்டைத் தமிழ்ச் சமுதாயம் மறக்க முடியுமா? மன்னிக்கத்தான் முடியுமா? கடைத்தர மான உருப்படிகள்தான் நாட்டிய அரங்கங்களிலே முதலிடம் பெறுகின்றன.

இந்த விரசமான உருப்படிகளைப் பாடியும், அப்பாடல் களுக்கு ஏற்ப இறைவன்பால் தான் கொண்ட விரக தாபத்தை எடுத்துக் கூறி, சரஸ் சல்லாபத்திற்கு அழைக்கும் பாவனையில் கண்களைச் சுழற்றியும், கழுத்தை நொடித்தும், புன்னகை காட்டியும், புளகமூட்டியும், இதழைக் காட்டியும், எழுச்சியூட்டியும், ஆடவர்களின் நெஞ்சங்களையெல்லாம் பஞ்சுபடாப் பாடுபடுத்திப் பஞ்சணைக்குள் ஈடுபடுத்தும் பாசாங்குக்கலையாகவே பயன்படுத்தித் தங்களின் வியாபாரத் தொழிலுக்கு விளம்பர சாதனமாகச் செய்துவிட்டனர், இடைக்கால நாட்டியக் கலைமாமணிகள்!

சமுதாயப் பெரும்புள்ளிகளான செல்வச் சீமான்களும் பூமான்களும் இக்கலைமாமணிகளின் கடைக்கண் வீச்சுக்கும் காதல்பிச்சைக்கும் காத்துக்கிடந்தனர் க்யூ வரிசையில்.

தேவரடியார்கள், தேவதாசிகள் என்னும் பெருமைக் குரிய புனிதமான பெயரும், தெய்வீகக்கலையும் இத்தகைய இழிவுக்கும் சீரழிவுக்கும் தாழ்ந்துவிட்டதை நினைத்து வருந் தாமல் இருக்க முடியவில்லை.