பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கவிஞர் கு. சா. கி.

என ஏழு வித மூலப்பண்களுக்கு, நூற்று மூன்று கிளைப் பண் களைப் பற்றிய குறிப்பைத் தருவதுடன், அவற்றையும் நான்கு வகைப்படுத்தி, -

பண்ணோர் பதினேழாம் பண்ணியல் பத்தேழாம் எண்ணும் திரமிரண்டும் பத்தென்ப-கண்ணிய நாலாந்திறத் திறமோர் நான்கு முளப்படப் பாலாறு பண் ணுற்று மூன்று' இந்தப்பண்களின் கிளைப்பண்களாக ஆயிரத்திற்கு மேற்பட்ட பண்கள் இருக்கின்றன. அறிவனார்-பஞ்சமரபு என்னும் இந் நூல் மட்டுமன்றி இன்னும் இசை இலக்கணங்கள் கூறும் பண்நூல்கள் தமிழில் இருக்கின்றன. அவற்றையெல்லாம் இசை இலக்கணப் புலவர்கள் ஆராய்ந்து, இன்றைய கர்நாடக இசைக்கும் பண்டைய தமிழிசைக்கும் உள்ள ஒற்றுமைவேற்றுமைகளை ஒப்புநோக்கி, விரிவான விளக்கங் கள் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளல் வேண்டும்.

குறிப்பாக இயல்-இசை-நாடக மன்றமும், தமிழிசை இயக்கத்தினரும், தமிழிசைச் சங்கத்தினரும் இத்துறையில் முழுமையான கவனம் செலுத்துதல் வேண்டும்.

வழி வழி வந்த கலை

கடைச் சங்க காலத்தில் மதிவானர் நாடகத் தமிழ் நூல்' என்ற நூலை யாத்துக் கவியரங்கேறிய பாண்டிய வேந் தன் திருமாறன் முதல், இளங்கோவடிகள், கரிகால் வளவன், முதல் குலோத்துங்க சோழன், மத்த விலாசம் எழுதிய பல்லவ மாமல்லன், ராஜராஜன், நாயக்கப் பேரரசின் தலைவன் கிருஷ்ணதேவராயன், தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னன் சரபோஜி போன்றவர்கள், கவின்கலை வல்லுநர்களாக இருந்திருக்கின்றனர் என்றும் இக்கலைகளில் ஈடுபட்டிருந்த கலைஞர்களுக்குப் பேராதரவு தந்தனர் என்றும் அறிகிறோம். .