பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக்கூத்தர் 113 வெண்பா அடையென்பார் தள்ளென்பா ரன்பொன்றில் லாமற் புடையென்பார் தங்கடைக்கே போகேங்-கொடையென் முந்துஞ்சோ மாபுவனே முன்னவனே கின்கடைக்கீழ் (ருல் வந்துய்ஞ்சோ மாதிலான் மற்று. - 134 இஃது ஒட்டக்கூத்தரைப் பழிகாரர் தொடர்ந்தபொழுது சோமன் வாசலில் ஒடிச்சொன்ன கவி. குறிப்பு : ஒருகால் பழிக்கத்தக்க செயலுடையார் சிலர் ஒட்டக்கூத்தரைப் பற்றித் துன்புறுத்த முயன்றனர். அப்போது' அவர் கிரிபுவனத்துக்கருகே வந்திருந்தார். அவர்களுடைய செயலேக்கண்டு அஞ்சிய கூத்தர் அவர்கள் கைக்கு அகப்படா மல் ஓடிச் சோமனுடைய பெருமனயை யடைந்தார். அவனும் அவர்க்கு வேண்டும் பாதுகாப்பும் பொருளுதவியும் புரிந்து சிறப் பித்தான். அதுகண்டு இப்பாட்டைப் பாடினரென்பர். ஒன்றுசிறிதும். கடைக்கு- வீட்டிற்கு, புவனமுன்னவன் - கிரிபுவு னத்து வாழ்வோருள் முன்னணியில் விளங்குபவன். உய்ந்தோம் என்பது உய்ஞ்சோமெனச் சிதைந்தது. இங்கே குறிக்கப்பட்ட செய்கிபற்றி ஒரு கதையும் கூறப்படுவதுண்டு. ஒருகால் செங் குந்தருட் சிலர் ஒட்டக்கடத்தரையடைந்து தமது செங்குந்தர் குலத் தைச் சிறப்பித்துப் பாட்டியற்றுமாறு வேண்டினர். தாம் பிறந்த குலத்தைத் தாமே புகழ்வது நன்றன்றெனக் கூத்தர் அதற்கு - இசைக்கிலர். அவர்கள் சினங்கொண்டு, குலப்பற்றில்லாத இக் கூத்தரைக் கொல்வதும் குற்றமன்றென எழுந்தனர். அவர் கைக் ககப்படாமல் திரிபுவனத்தில் வாழ்ந்த சோமனிடம் அவர் அடைக்கலம் புகுந்தார். அவன் அவரை ஒரு புடையில் மறைத்துவிட்டுப் பேழையொன்றில் தன் மகனே வைத்து, இத னுள் புலவர் இருக்கிருர்; எடுத்துச் சென்று வேண்டுவது செய்க" என்று அவர்களிடம் தந்தான். வெகுண்டு வந்த செங்குந்தர் அதனே எடுத்துச் சென்று கிறந்து பார்த்து அதனுள் சோமன் மகன் இருக்கக் கண்டு இராச் சினத்தாாய்ச் ச்ோமனிடம் வந்து, ஆரவாரித்தனர். அவன், நீங்கள் உங்களுடைய உண்மை 8