பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 தமிழ் நாவலர் சரிதை . கட்டளைக் கலித்துறை மீனகம் பற்றிய வேலையு மண்ணையும் வெற்படங்கப் போனகம் பற்றிய மாலலே யோபொருந் தாவரசர் கானகம் பற்றக் கனிவரை பற்றக் கலங்கள்பற்ற வானகம் பற்ற வடிவேல் விடுத்த மனதுங்கனே. 138; இது αστιρετ மடையனைத் தண்டஞ் செய்ததை விலக்க ஒட்டக்கூத்தர் பாடியது. . * - குறிப்பு : ஒருகால் சோழவேந்தன் அரண்மனையில் அட்டில் தொழில் புரியும் மடைத் தொழிலாளருள் ஒருவன் குற்றம் செய் தாகை, அதனே யாராய்ந்த வேந்தன் அவனத் தண்டஞ் செய் யக் கருதின்ை. குற்றத்தின் பொறுக்கத்தக்க தன்மையும் தண் டத்தின் கடுமையும் சீர்துக்கிய கூத்தர் வேந்தனே இப்பாட்டால் இரத்து குற்றஞ்செய்த மடையனே உய்வித்தாரென்பர். மீன் அகம்பற்றிய வேலே - மீனினங்களைத் தன்னிடத்தே கொண்ட கடல். : போனகம்பற்றிய மால் - உரைவாக - உண்டொடுக்கிய, திருமால். மனதுங்கன் - உள்ளத்தால் உயர்ந்தவன். கட்டளைக் கலித்துறை ஆரே யெனுமொன்று சொல்லத் தொடங்கினு மவ்விடத்தின் . பேரே வருமென்ன பேறுபெற் றேன்பெரு நான்மறையின் வேரே மிதிலேயின் மின்னுடனே வெய்ய கானடந்த - காரே கடல்கொளுந்தச்சிலே வாங்கிய காகுத்தனே. 159 இஃது - ஆரியைப் பாடவேண்டுமென்ன - ஒட்டக்கூத்தர் பாடியது. குறிப்பு : ஒட்டக்கூத்தர் முதன்முதற் சோழ வ்ேந்தனைக் காணக் சென்ருர். அவன் அவரது புலமை நலம் காணவேண்டி :அரியைப் பாடுக” என்று கேட்டான். தாம் முதற்கண் வேந்த இனக் காணவந்தபோது, அவன் திருமாலைப் பாடுக வென்றது,