பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் - 139 பகம் பாடுங் தொழில் , அதனைப் புவிராசர் பாடுவது தகுமோ என்றாக, அவர்க்கு அவன் இப்பாட்டைப் பாடின னென்பர். பாண்டியனைப்பற்றியும் அவன் பாடிய கலம்பகத்தைப்பற்றியும் வேறே வரலாற்றுக் குறிப்பொன்றும் தெரியவில்லை. திங்களைச் சூடுவோன் கங்கையையும் சூடிக்கொள்வது போலத் திங்கள் மரபினனை பாண்டியன், கங்கை மரபினனை ஆறம்வளர்த்த முதலியைப் பாடல் தகும் என்பது கருத்து. வேளாளர் கங்கை மரபினர். சந்திரகிரியாண்ட வேந்தர்களுக்குப் பதினேந்தாம் ஆாற்ருண்டில் அறம்வளர்த்தமுதலியா ரென்ருேர் அமைச்சர் இருந்தனரெனத் தெரிகிறது. -- வெண்பா. தொட்டி லிருக்கத் தொடங்கிய நாண்முதலாய் அட்டதிக்கு கின்குடைக்கி ழாயிற்றே-விட்டலேயா தன் குமரி யன்றித் கணிக்குமரி கொள்ளாே தென் குமரிக் கேகுவதென் செப்பு. 3. 6 7. இது பாண்டியன் விட்டல ***րտաս பாடியது. குறிப்பு : இந்த விட்டலராசா விசயநகரத்து இராசவமி சத்தைச் சார்ந்தவர். இவர் சதாசிவராய (கி. பி. 1542-67) காலத்தில் இருந்தவர். தஞ்சாவூர்ச் சில்லாவில் கோவிலடி என்னு மூரிலுள்ள கல்வெட்டும், தோசூரிகோனேரு கவிசெய்த தெலுங் குப் பாலபாகவதமும் இவரைச் சந்திரவமிசத்தவ வென்றும், ஆர வீடுபுக்காயரின் பெரும்பேரன் என்றும் கூறுகின்றன. ஆரவிடுபுக்கராயன் மகன் ராமராயன் ; ராமராயன் மகன் திம்மராயன் , திம்மராயன் மகன் விட்டலராயன். விட்டலராயன் சகோதரகிைய சின்ன திம்மர்ாயன் என்பவன் சந்திரகிரியை ஆண்டுகொண்டிருந்ததாகக் கல்வெட்டுக்களால் தெரிகின்றது. "வீரப்பிரதாப பூரீமகா மண்டலேஸ்வர ராமராச திம்மராச விட் டலதேவமகாராசா” என்பது விட்டலராசாவுடைய முழுப்பெயர். திருவிடைமருதூரிலுள்ள கல்வெட்டொன்று, சக வருஷம்.