பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தமிழ் நாவலர் சரிதை என்னிலை யறிந்தனை யாயி னிங்நிலைத் தொடுத்துங் கொள்ள கமையலென் அடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை கல்யாழ் மண்ணுர் முழவின் வயிரியர் . இன்மை தீர்க்குங் குடிப்பிறக் கோயே. 15. இது தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமண ?னப் பெருத்தலைச் சாத்தனுர் பாடியது. குறிப்பு :-பெருந்தலேச்சாத்தனர் ஆவூர் மூலங்கிழா ரென்ற கல்விசைச் சான்றேருடைய மகரைாவர். இவர் கொங்குநாட்டி அள்ள பெருந்தலை யென்னு மூரில் வாழ்ந்தமையின் இவரைச் சான்றேர் பெருந்தலைச்சாத்தனுர் என வழங்கினர். இவர்க்குக் குமணனுடைய கொடைப்புகழில் பே ரீடுபாடுண்டு. குமணன் என்பவன் பழனி உடுமலைப்பேட்டை நாடுகளைச் சார்ந்த ஆனே மலேத் தொடரிலுள்ள முதிரமலைக் குரியன். இப்போது அங்குள்ள குமணமங்கலம் குமணனது பெயரை கினேவுறுத்துக்கொண் டிருக்கிறது. குமணன் என்னும் பெயருடனே தலைவர் சிலர் இடைக்காலத்தும் இருந்துள்ளனர்.தோண்டைநாட்டு ஆமூர்க் கோட்டத்து ஆமூரில் குமணன் என்பவன் ஏரி குளங்களே வெட்டிய செய்தியை, இராயமங்கலத்துக் கல்வெட்டொன்று (A. R. No. 80 of 1933-34) கூறுகிறது. இதுகிற்க, குமணனுடைய புகழ் மிகுதிகண்டு பொருமையுற்ற அவன் இளவல், அவனது காட் டைக் கைப்பற்றிக்கொண்டு அவனேயும் கொல்லுதற்குச் சூழ்ந் தான். அதனே அறிந்த குமணன், நாட்டின் நீங்கிக் காட்டை யடைந்து வாழ்ந்துவந்தான். அக்காலத்தே பெருந்தலேச் சாத்த குர் மிக்க வறுமையுற்று அவன்பாற் பரிசில்பெற முதிரத்துக்கு வந்தார். வந்தவர் நாட்டில் நிகழ்ந்திருக்கும் செய்தியறிந்து பெரி தும் ஏமாற்றமடைந்தார். ஆயினும், இளங்குமணன் மனத்திட்ப மில்லாதவ னென்பதைச் சூழ்ந்தறிந்து, உடன்பிறந்தார் இருவர்க் கிடையே நிலவிய பகைமையைப் போக்கி ஒற்றுமை யுளதாக்கு தற்கு முயல்வாராயினர். வேறு நெறி யொன்றும் புலப்படாமை யால் காட்டில் குமணன் இருக்குமிடத்தை யறிந்து அவன்பாற்