பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y தமிழ் காவலர் சரிகைکے தமிழ்நாட்டு வ்ரலாறு தொடர்புற அறிந்திருக்க வேண்டிய அமைதி இல்லையாய்விட்டது. சங்ககாலத்துக்குச் சங்க நூல்களும், இடைக் காலத்துக்குப் பல்லவ பாண்டிய சோழர்கள் வழங்கியுள்ள கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் தமிழ் இலக்கியங்களும் வேறு பிற குறிப்புக்களும் கிடைத்துள்ளன. இவற்றைக்கொண்டு பல்லவர், பாண்டியர், சோழர், விசயநகர வேந்தர் முதலி யோருடைய வரலாறுகள் அறிஞர் கிருஷ்ணசாமி அய்யங்கார், பி. டி. சினிவாசய்யங்கார், திரு. நீல கண்ட சாஸ்திரியார் முதலியோர்களால் எழுதப் பட்டுள்ளன. இவற்றையும் மேனுட்டவர் குறிப்புக் களையும் ஒருங்குவைத்துத் தமிழ் நாட்டின் வர லாற்றை ஒரு கோவையுறத் தொகுத்தெழுகலாம். அதனைச் செய்விக்கும் பணியில் தமிழ்ச் செல்வர் களும் அரசியலறிஞர்களும் ஆசிரியப் பெரியோர் களும் இறங்குதல் வேண்டும். - . . . . •. தமிழகத்துத் தமிழ்மொழியிலுள்ள இலக்கியங் கட்கு ஒரு வரலாறு காண்டல்வேண்டும் என்னும் வேட்கை இந்நாளில் மிக்கு நிலவுகிறது. இலக்கிய வரலாறென்பது, நாட்டு வரலாற்றிலிருந்து பிரிந்து விரிந்து தோன்றும் பெருமையுடையது. நாட்டு வர ாைற்றின் அடிப்படையின்றி. இலக்கிய வரலாறு காண்பதென் பது அரங்கின்றி வட்டாடுவது போல்வதாகும். நாட்டின் பொருளாதாரம், சமுதாயம், வாணிகம், சமயம் அரசியலமைப்பு முதலிய துறை பலவற்றிற்கும் தோற்றமும் வளர்ச்சியும் முடிவும் காண்டல் அரு