பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

91

சிறுகுளம் சீதாபதி ஐயர் பிள்ளை என்பதை னைத்துக் கொண்டு சி,சீ. நாராயணன் என்று கூறுகிறான். அவனுடைய தந்தை சிறையில் இருப்பதை நாலு பேருக்கு நடுவில் சொல்லிக் காட்டுகிறான். கோபுவுக்கு மணமாவதும். ஏழையாகிய நாராயணனுக்கு மணமாவதும், தன்னுடைய தந்தை இரண்டாம் தாரம் மணம் செய்து கொள்வதும் அவனுடைய உள்ளத்தில் பொறாமையை எழுப்புகின்றன. தானும் இன்பம் பெற வேண்டும் என்ற எண்ணம் முந்துகிறது. கிறிஸ்துவனானால் தான் விழைந்த இன்பம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து அந்தச் சமயத்தினரை அணுகுகிறான். அவன் சகோதரன் கோபாலனுடைய முயற்சியால் அது தடைபடுகிறது. அவன் மறுபடியும் தன் சகோதரி சாவித்திரியின் நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறான். பல காலம் அவன் இருக்கும் இடமே தெரியவில்லை. மலையாளம் சென்று போகவாழ்வு அனுபவிக்கிறான். மனம் போலத் திரிந்து நாடகக் கம்பெனியில் சேருகிறான்.

கோபால்னும் நாராயணனும் மேல் படிப்புக்காகச் சென்னை வந்து வாழும்போது சங்கரன் நாடகத்தில் நடிப்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். அவனைத் தம் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். பத்மாவதியைக் கண்டவுடன் அவள் அழகு அவனை மயக்குகிறது. குறும்பு செய்கிரன், அதனை அறிந்து நாராயணன் கண்டிக்கிறான். பழைய பொறாமை மீண்டும் எழுகிறது. அவன் மனத்தில் ஒரு வஞ்சச் செயல் உருவாகிறது. கோபாலனுக்கும் பத்மாவதிக்கும் தொடர்பு இருப்பதாக நாராயணன் ஐயம் கொள்வதற்கு வேண்டிய காரியத்தைச் செய்கிறான்.


1. பத்மாவதி சரித்திரம், ப. 46.

2, ப. 55.

3. ப. 97-103,