பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

தமிழ் நாவல்

தன்னிடம் பணம் கொடுத்து உண்ணும் அயலார் குழந்தைகளையும் தன் குழந்தைகளாகப் பார்க்கிறவள். மருமகளே மெச்சும் மாமியார். தன் மகனும் மருமகளும் சுதந்தரமாகப் பழக விடுபவள். பொல்லாதவரைக் கண்டு விலகுகிறவள். மானம் தாழப் பிறரிடம் ஏற்றலே விரும்பாதவள். தெய்வ பக்தி மிக்கவள்.

அவள் தன் குடும்பத்தின் அவல நிலையை உணர்ந்து, இனி வாழக் கூடாது என்று நினைக்கிறாள். இன்ன நேரத்தில் மறைவேன் என்று சொல்லி உயிர்விடுகிருள். இப்படி நம் நாட்டில் பல குடும்பங்களில் நிகழ்வதை அறிந்தவர்கள், இந்த நிகழ்ச்சி இயற்கைக்கு அப்பாற் பட்டது என்று சொல்ல மாட்டார்கள்.

சாவித்திரி

ழகும் பண்பும் எள்ளளவும் இல்லாத கணவனை மணந்து ஒரு சுகத்தையும் அறியாது பிறருக்கு உழைக்கவே பிறந்த சாவித்திரி இரக்கத்தை எழுப்பும் பாத்திரம். கோபாலன் சகோதரியாகிய அவள் வெளுத்ததெல்லாம் பாலென்று நம்பும் வெள்ளேயுள்ளம் படைத்தவள். சாலாவையும் நாகமையரையும் தனக்குப் படிப்புச் சொல்லித் தருவதனுல் நல்லவர்களென்று நம்புகிறவள். நாகமையர் அனுப்பும் புத்தகங்களில் காமம் தொனிக்கும் பாட்டை எழுதியனுப்பியும் பார்த்து உணரத் தெரியாதவள். நாகமையர் எழுதிய ஆசைக் கடிதத்தைக் கண்டு இன்னார் எழுதினரென்று தெரிந்து கொள்ளாமல் நடுங்கியவள். விதவைக் கோலம் பூண்டு, அக்கோலத்தைக் கண்ணாடியில் கண்டு மூர்ச்சை போட்டு வீழ்கிறவள். இறுதியில் அவள், கோபாலனுடைய குழந்தைகளைச் சீராட்டி இன்புறுகிறாள். கோபாலன் குழந்தைகளைப் பற்றிய வேலை இல்லாத நேரத்தை