பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தமிழ் நாவல்

தோற்றத்தைச் சொல்கிறார்: 'அப்புலவர் திலகருக்கு அப்பொழுது ஐம்பது வயதுக்கு மேல் இருக்கலாம். அவர் சரீரத்தின் உன்னத எழுச்சியையும் நிமிர்ந்த கம்பீர நடையையும் மயிர் செறிந்த புருவங்களின்கீழ் அதி கூர்மையுடன் பிரகாசிக்கும் கண்களையும், எப்பொழுதும் பிறர் நன்மையைச் சூழ எழும் நினைவுகளால் உண்டான வரிகள் ஓடிய விசாலமான நெற்றியையும், உதடுகள் பொருந்தி மன உறுதியைக் குறிக்கும் வாயையும், சாந்தமும் பெருந்தன்மையும் குடி கொண்டு விளங்கும் தோற்றத்தையும் கண்டவர்கள் நெஞ்சில் ஒருவித ஆர்வமும் அச்சமும் வியப்பும் உண்டாதல் இயல்பே!’[1] என்கிறார். இந்த நாவலின் ஆசிரியர் கிறிஸ்துவக் கல்லூரியிலே பயின்றவர், டாக்டர் மில்லரை நேரிலே பார்த்தவர். நாராயணனையும் கோபாலனையும் அந்தக் கல்லூரியிலே சேரச் செய்து, டாக்டர் மில்லரைத் தாம் கண்டவாறே வருணிக்கும் சந்தர்ப்பத்தை அவர் உண்டாக்கிக் கொண்டார். இதைவிட ஆசிரியருக்குச் செலுத்தும் காணிக்கை வேறு உண்டா?[2]

திருக்குற்றாலத்தின் வருணனையைச் சொல்லி ஓர் அதிகாரத்தின் பாதியை நிரப்புகிறார். அந்தக் காட்சிகளும் அவர் அனுபவத்தில் உணர்ந்தவை.

சில சிறு குறைகள்

ல இடங்களில் நீதி உபதேசங்கள் குறுக்கிடு கின்றன. ஆசிரியரின் பெருமையையும்,[3] பெண் கல்வியின் இன்றியமையாமையையும்,[4] வைத்தியரின் மகிமையையும்[5] சிறிது நீளமாகவே சொல்லியிருக்கிறார். நடுநடுவில் ஆசிரியர் நம்மை விளித்துத் தம்முடைய விமரிசனத்தைக்


  1. ப. 183.
  2. ப. 209.11.
  3. ப. 224
  4. ப. 63.
  5. ப. 170. 1.